தீவிரமடைந்த கொரோனா!!!  அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!!! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு 

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

 


அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி அதிபர் ட்ரம்ப் அவசரநிலையை அனைத்து மாகாணங்களுக்கும் அறிவித்து இருக்கிறார். இதுவரை அமெரிக்காவில் 40 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் 1,701 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 46 மாகாணங்களுக்கு கொரோனா பரவி இருக்கிறது. ஒவ்வொரு மாகாணங்களிலும் நோய் தடுப்புக்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் அவசரநிலை பிரகடனத்தைப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், 5,000 கோடி டாலர் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப் பட்டு இருக்கிறது.

அதிபர் ட்ரம்ப் “அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக தீவிரமாகப் போராடி வருகிறார்கள். அமெரிக்க மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சில தியாகங்களை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான சூழல் உருவாகும். அடுத்த 8 வாரங்கள் மிகவும் இக்கட்டானவை” என்றும் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொரு மாகாணங்களிலும் பல தடுப்பு முகாம்கள் ஏற்பட்டுத்தப் பட்டு இருக்கின்றன. மேலும் தனியார் மருத்துவமனைகளுடன் அரசு கூட்டாக சேர்ந்து செயல்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டு இருக்கிறது. குறுகிய காலங்களில் வாங்கப் பட்ட மாணவர்களின் கல்வி கடன்கள் கூட அந்நாட்டில் தற்போது தள்ளுபடி செய்யப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

அரசியலில் இருந்து தப்பிப்பது ஒன்றுதான் ரஜினிக்கு ஒரே வழி: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்த கருத்தை தெரிவித்தார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சிக்கன் பிரியாணி: 2 மணி நேரத்தில் காலியான அதிசயம்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக சிக்கன் சாப்பிடும் பழக்கம் உள்ள பலர் வதந்தி காரணமாக சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி வருகின்றனர். சிக்கன் சாப்பிட்டால் கொரோனா

விவிஐபிக்களுக்கும் கொரோனா!!! இதுவரை பாதிக்கப் பட்ட உலகப் பிரபலங்கள்

கொரோனா வைரஸ் பரவிய தருணத்தில் இருந்தே சமூக ஊடகங்களும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கொரோனா பற்றிய அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் தனக்கு பிடித்த ந

"We Love Muslims" என டெல்லி மசூதியில் எழுதிவைத்த இந்துக்கள்..!

நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நீங்கள்தான் நாங்கள், இந்துக்கள் முஸ்லீம்களை நேசிக்கிறோம்.

உலக தூக்கத் தினம் இன்று...

கண்ணதாசனின் இந்த வரிகளில்  தூக்கத்தோடு அமைதியும் கூடவே சேர்ந்து கொள்கிறது.