இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய வேண்டாம்.. தமிழக அரசுக்கு அலர்ட் விடுத்ததா உளவுத்துறை?
Send us your feedback to audioarticles@vaarta.com
’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் வரும் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க வேண்டாம் என உளவுத்துறை, அரசுக்கு அலர்ட் செய்து உள்ளதாக வெளிவந்திருக்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரைவிளையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அதா சர்மா உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி இளம் பெண்களை முஸ்லிமாக மாற்றி ஆப்கானிஸ்தான் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ப்பது போன்ற கதை அம்சம் கொண்டதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படம் மே ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இந்த படத்திற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது குறித்து வழக்கை கேரள உயர் மன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்தவர்களுக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட வேண்டாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இந்த படம் வெளியானால் இங்கும் எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிகிறது. எனவே தமிழக அரசு இந்த படத்திற்கு தடை விதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout