விலை குறைப்புக்குப் பதிலாக, கலால் வரியை உயர்த்திய மேதைகள்!!! ராகுல்காந்தி விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் அக்கட்சியின் ஆட்சி கேள்வி குறியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட இந்த குழப்பமான சூழ்நிலைக்கு பா.ஜ.க தான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், கடந்த மார்ச் 12 ஆம் தேதி மத்தியப் பிரதேச ஆட்சி சீர்குலைவுக்கு பா.ஜ.க தான் முழு காரணம் எனறு ராகுல் காந்தி நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
அது குறித்து, “காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கலைக்கும் வேலையில் நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும் நேரத்தில், சர்வதேச கச்சா பொருட்களின் விலையில் 35% சரிவு ஏற்பட்டு இருக்கிறது. பிரதமர் அதைக் கவனிக்கத் தவறிவிட்டார். இந்த விலை சரிவை பயன்படுத்திக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையில் ரூ.60 ஐ குறைத்து நாட்டு மக்களுக்கு பயன் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
அந்த டிவிட்டை தொடர்ந்து தற்போது ராகுல்காந்தி இன்னொரு டிவிட்டையும் தட்டி விட்டு இருக்கிறார். அதில் “நான் 3 நாட்களுக்கு முன்பு நான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். சர்வதேச கச்சா பொருட்களின் விலை சரிவை இந்திய நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வழிசெய்ய வேண்டும் என ஆலோசனை கூறியிருந்தேன். அதை ஏற்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி இருக்கிறார்கள் எங்கள் மேதைகள்” என்று ராகுல் காந்தி கிண்டலாக விமர்சித்து உள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 3 அதிகரித்து உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Just 3 days ago I had requested @PMOIndia to pass on the benefit of the global oil price crash to Indian consumers, by slashing the prices of petrol & diesel in India. Instead of heeding this advice, our genius has gone and hiked #exciseduty on fuel! pic.twitter.com/lGEQosS9JE
— Rahul Gandhi (@RahulGandhi) March 15, 2020
Hey @PMOIndia , while you were busy destabilising an elected Congress Govt, you may have missed noticing the 35% crash in global oil prices. Could you please pass on the benefit to Indians by slashing #petrol prices to under 60₹ per litre? Will help boost the stalled economy.
— Rahul Gandhi (@RahulGandhi) March 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout