'96' படத்தில் நடிக்க மறுத்தேன்: சமந்தா கூறிய ரகசியம்

  • IndiaGlitz, [Tuesday,February 04 2020]

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ’96’ திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு, வரும் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் விழா ஒன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை சமந்தா பேசியபோது ’இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அவர்கள் இந்த படத்தில் திரிஷா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறியபோது இந்த படத்தில் நடிக்க முதலில் நான் மறுத்தேன். ஆனால் அவர் இரண்டாவது முறையாக என்னிடம் வந்து என்னை சமாதானம் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்தார். இப்போது தான் தெரிகிறது இந்த படத்தில் நான் நடிக்க எடுத்த முடிவு மிக சரியான முடிவு என்று.

இந்த படம் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில் இந்த படம் வெளியானவுடன் என்னுடைய கேரக்டர் மிக அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் என்னுடைய ’ராம்’ ஆக நடித்த சர்வானந்த் மிகவும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார் அவருடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி’ என்று சமந்தா கூறியுள்ளார்.

More News

இந்தியா வாங்கவில்லையென்றால் என்ன..?! நாங்கள் வாங்குகிறோம்..! பாக். பிரதமர் இம்ரான்கான்.

மலேசியாவிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால் அதனை பாகிஸ்தான் ஈடு செய்யும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

'வலிமை' படத்தில் அஜித் கேரக்டர் குறித்த தகவல்

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பொருளாதார பிரச்சினை காரணமாக பின்வாங்கி வருவதாகவும்

மொபைல் ரீசார்ஜ் செய்யனுமா..கூகுள்ல search பண்ணுங்க..! கூகுளின் புதிய திட்டம்.

இந்தியாவில் Search-ல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மொபைல் ரீசார்ஜ் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரி, லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய லாஸ்லியா நடிக்கும் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே

ஆன்லைனில் சயனைடு வாங்கி மனைவியை கொலை செய்த பேங்க் மேனேஜர்: அதிர்ச்சி தகவல்

மனைவி வரதட்சணை வாங்கி வரவில்லை என்பதற்காக சயனைடு மாத்திரை கொடுத்து கணவரே கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது