இன்னும் இருக்கு… சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த பிளான்!!! என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Monday,August 31 2020]
தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கடந்த 2009 முதல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவிற்கு எதிரான சில நாடுகளுடன் கூட்டணி அமைத்து அமெரிக்கா தென் சீனக் கடல் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அமெரிக்காவின் இரண்டு அதிபயங்கர போர்க் கப்பல்கள் தற்போது தென் சீனக் கடலுக்கு அருகில் போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் போர்க கப்பல்களுடன் கடந்த மாதம் இந்தியக் கப்பற்படை வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, பிலிப்பைன்ஸ் பிரதமர் இந்தியா தனது பங்கிற்கு தென் சீனக் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து இருக்கிறது ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஆனால் இதுவரை இந்தியாவின் கப்பல்கள் எதுவும் தென்சீனக் கடல் பகுதியில் ரோந்து பணிக்கு ஈடுபடுத்தப் படவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடுமையான எல்லைப் பிரச்சனை ஏற்பட்டு தற்போது பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் சீனாவின் துருப்புகள் முற்றிலுமாக இந்திய எல்லைப் பகுதியில் இருந்து அகற்றப்பட வில்லை என்று இந்திய இராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த ஜுன் 15 ஆம் தேதி ஏற்பட்ட கல்வான் தாக்குதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பின்னரும் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் அதிகமாகிக் கொண்டே வந்ததாகவும் இந்திய இராணுவம் கவலைத் தெரிவித்தது. இந்நிலையில் சீனாவுடனான அனைத்து நட்புணர்வுகளையும் தடை செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் துவங்கியது. முதற்கட்டமாக சீனச் செயலிகள் இந்தியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அடுத்து இறக்குமதி பொருட்களுக்கும் பல்வேறு தடை விதிமுறைகளை இந்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது தென்சீனக் கடல் பகுதியில் இந்தியக் கப்பற்படை ரோந்து பணியில் ஈடுபடுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி சீனாவின் அச்சுறுத்தலை மீறி இந்தியக் கப்பல் தென்சீனக் கடல் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபார் பகுதியில் உள்ள மலாக்கா நீர்ச்சந்திப்பு அருகே இந்தியாவின் மிக் 29 ரக கப்பற்படை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற்ற இந்தியக் கப்பற் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.