வருமானவரி தாக்கல் செய்ய, வரும் ஜுன் 30 வரை காலஅவகாசம்!!! மத்திய அரசு அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா எதிரொலியால் வருமானவரி, ஜி.எஸ்.டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சில சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமானவரி, ஜி.எஸ்.டி போன்றவற்றின் கணக்குகளைத் தாக்கல் செய்ய ஜுன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது எனத் தெரிவித்தார். மேலும், காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12% லிருந்து 9% ஆக குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் “மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜி.எஸ்டியை தாக்கல் செய்ய ஜுன் 30 வரை காலஅவகாசம் அளிக்கப்படும். ரூ. 5 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது. மேலும், ஆதார்- பான் அட்டைகளை இணைப்பதற்கான கால அவகாசம் ஜுன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் தொழிற்துறை நிறுவனங்கள் தங்களது கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு போதுமான கால நீட்டிப்பு கிடைக்கும் என மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர். மேலும், காலம் தாழ்ந்து தாக்கல் செய்யும் கணக்குகளுக்கு வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது. ரூ. 5 கோடிக்கும் கீழ் வருமானம் இருந்து காலதாமதாக கணக்குகளைத் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் எந்தவிதமான அபராதத்தையும் செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments