அடுத்த பிறவியில் பிறக்க விரும்பும் கேரக்டர்: 'சவரக்கத்தி வெற்றி விழாவில் பூர்ணா

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சவரக்கத்தி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மிஷ்கின், ராம், பூர்ணா, இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை பூர்ணா பேசியபோது, 'இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த 25 நாட்களும் நான் நானாக இல்லை. நான் இந்த படத்தின் கேரக்டரான சுபத்ராகவே வாழ்ந்தேன். படப்பிடிப்பு முடிந்த பின்னரும் எனக்கு அந்த கேரக்டரின் பாதிப்பு இருந்தது. ஒருவேளை அடுத்த பிறவி என்ற ஒன்று இருந்தால் மீண்டும் சுபத்ராவாகவே பிறக்க விரும்புகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்

இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின், 'நான் நல்ல படம் எடுக்கவில்லை என்றால் என்னை நார், நாராக கிழியுங்கள்' என்று ஆவேசமாக பேசினார்.

More News

பிரபல ரவுடி பினு போலீசில் சரண் அடைந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சென்னையை ஆட்டிப்படைத்து வந்த பிரபல ரவுடி பினு, போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

ஏலம் குறித்த செய்திக்கு கவிதாலயா நிறுவனம் விளக்கம்

கோலிவுட் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் வங்கி ஒன்றினால் ஏலத்திற்கு வருவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன

காதலர் தினத்தில் கைகோர்க்கும் கவுதம் மேனன் - சூர்யா

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைவார்கள்

மாதவன் தம்பதியின் தொடரும் காமெடி காட்சிகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த பிரபாகர் என்பவர் கைது செய்யப்பட்டார்

ஒரே இரவில் உலகப்புகழ் பெற்ற புருவ டான்ஸ் நடிகை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷெரில் சமூக வலைத்தளங்களில் பல நாட்கள் டிரெண்டில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.