அடுத்த பிறவியில் பிறக்க விரும்பும் கேரக்டர்: 'சவரக்கத்தி வெற்றி விழாவில் பூர்ணா

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சவரக்கத்தி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மிஷ்கின், ராம், பூர்ணா, இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை பூர்ணா பேசியபோது, 'இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த 25 நாட்களும் நான் நானாக இல்லை. நான் இந்த படத்தின் கேரக்டரான சுபத்ராகவே வாழ்ந்தேன். படப்பிடிப்பு முடிந்த பின்னரும் எனக்கு அந்த கேரக்டரின் பாதிப்பு இருந்தது. ஒருவேளை அடுத்த பிறவி என்ற ஒன்று இருந்தால் மீண்டும் சுபத்ராவாகவே பிறக்க விரும்புகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்

இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின், 'நான் நல்ல படம் எடுக்கவில்லை என்றால் என்னை நார், நாராக கிழியுங்கள்' என்று ஆவேசமாக பேசினார்.