சென்னையில் நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில் நடிகர் நகுல் மனைவி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஐஐடி வளாகத்தில் கின்னஸ் சாதனைக்காக 100 அடியில் முறுகலான கமகம நெய் தோசை சுடப்பட்டது.
சென்னை ஐஐடி வளாகத்தில் சரவணபவன் ஓட்டல் சமையல் கலைஞர்கள் 50 பேர் இணைந்து, 100 அடி நீள தோசை ஒன்றை சுட்டுள்ளார்கள். இந்த பிரமாண்ட தோசை பிரபல செஃப் வினோத் என்பவரின் தலைமையில் சுடப்பட்டது. நடிகர் நகுல் மனைவி சுருதி, விஜய் டிவி மாகாபா ஆனந்த், போன்றோர் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் கலந்து கொண்டனர்.
இந்த சாதனைக்காக இன்ஜினியரிங் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று பெரிய தோசை கல் தயார் செய்யப்பட்டது. இந்த கல் 180-200 டிகிரியில் ஒரே சீரான வெப்பத்தில்தான் இருக்க வேண்டும் என்றும் சமையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
20 கிலோ மாவில் சுமார் 50 பேர் இணைந்து சுட்ட இந்த தோசை விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஐதராபாத்தில், 54 அடி 8.65 இஞ்ச் நீள தோசைதான் கின்னஸ் சாதனையாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments