ஓடும் பேருந்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

துாத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்ற பகுதியை சேர்ந்த நயினார் - இலக்கியா தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களது திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென இலக்கியா குழந்தையுடன் காணாமல் போனார். இதனையடுத்து நயினார் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ஓடும் பேருந்து ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மடியில் ஒரு குழந்தை இருந்ததாகவும் போலீசாருக்குக் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மருத்துவமனை சென்ற போலீசார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட பெண் இலக்கியா என்பதையும், அவருடன் விஷம் அருந்தியது இலக்கியா கணவர் நயினாரின் சகோதரர் என்பதையும் கண்டுபிடித்தனர்.

இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓடிப்போனார்களா? விஷமருந்தி தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.