பேபி பம் புகைப்படத்திற்கு பிறகு 'மோதிர விரல்' புகைப்படம்… நடிகை இலியானாவின் காதலரா இவர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்ட பிறகு தற்போது மோதிரம் அணிந்திருப்பது போன்ற ஒரு கையின் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து நடிகை இலியானாவின் காதலர் இவர்தானா? என்ற உற்சாகத்தை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவந்த நடிகை இலியானா தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தமிழிலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இதையடுத்து சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை இலியானா திடீரென உடல்எடை அதிகரித்தது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில் அவருடைய மனநிலை குறித்தும் எதிர்மறை கருத்துகள் சமூகவலைத் தளங்களில் வைக்கப்பட்டு வந்தன. இதையெல்லாம் பொருட்படுத்தாத நடிகை இலியானா தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் புகைப்படக் கலைஞர் ஆண்ட்டூ நீபோன் என்பவர் குறித்து இன்ஸ்டாவில் கருத்துப் பதிவிட்ட நடிகை இலியானா, ‘இவர் ‘ நல்ல கணவராக இருப்பார்‘ என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் விரைவில் இந்தக் காதலும் முறிந்துவிட்டதாகத் தகவல் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மிச்செலுடன் டேட்டிங் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்தத் தகவலும் உறுதிச்செய்யபடாமல் இருந்தது.
இதைத் தொடர்ந்து சமீபகாலமாக நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத் தளத்தில் வெளியிட்டு வருகிறார். ஆனால் காதலர் அல்லது கணவர் யாரென்று கூறாமலேயே நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்களும் பிரபலங்களும் அதிர்ச்சியை தெரிவித்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து தற்போது கையில் மோதிரம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் ‘கை‘ புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நடிகை இலியானா வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை இலியானாவின் கணவர் இவர்தானா? என்று உற்சாகத்தை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் முழு உருவமும் அதில் தெரியாததால் ஏமாற்றம் அடைந்தள்ளனர். எனினும் காதலர் குறித்த முதல் புகைப்படம் என்பதால் ரசிகர்கள் நடிகை இலியானா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஸ்மைல் எமோஜிகளைப் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com