இவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கும் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஒரு சுவாரசியமான கருத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இவர் வேகப்பந்துகளை மிகவும் அசால்ட்டாக சமாளிக்கும் திறமைக் கொண்டவர் என்பதால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இவரிடம் படாதபாடு பட வேண்டியிருக்கும். நேரம், காலம், இடமெல்லாம் இவருக்கு பெரிய விஷயமே கிடையாது. எந்த நாட்டிலும் எந்த களத்திலும் அசராது விளையாடும் திறமையுடையவர்.
கொரோனா காலத்தில் இவரிடம் இணையத்தின் வாயிலாக ரசிகர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அப்படி எழுப்பப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் யாருடைய பந்தை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டீர்கள்?” என்பது. அதற்கு அவர் அளித்த பதில், பாகிஸ்தான் வேகப்பந்து விச்சாளர் முகமது அமிர் என்பது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் முகமது அமிர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். வேகப்பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை சாலியான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மேட்ச் பிட்சிங்கில் ஈடுபட்டதாகக்குற்றம் சாட்டப் பட்டார். அதனால் 5 வருடங்கள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
மீண்டும் விளையாட தொடங்கிய இவர் 38 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும் 2017 இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com