"நானும் பிராமணனே"....! நேரலையில் சர்ச்சையை கிளப்பிய பிரபல கிரிக்கெட்டரின் பேச்சு....!

நேரலையில் பேசும் போது, நானும் பிராமணன் தான் என்று சுரேஷ் ரெய்னா கூறியிருப்பது, இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரெய்னாவின் பேச்சிற்கு இணையவாசிகள் பலரும், கடுமையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த திங்களன்று கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே, துவக்க ஆட்டம் நடைபெற்றது. அப்போது வருணனையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டார். இவர் இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய அங்கம் வகிக்கிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

போட்டியின் வருணனையாளர், தென்னிந்திய கலாச்சாரத்தை எப்படி பின்பற்றுகிறீர்கள்..? நடனமாடுவது, வேஷ்டி கட்டுவது, விசில் அடிப்பது உள்ளிட்ட கலாச்சாரங்களை பின்பற்றுவதால் கேட்கிறேன், என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ரெய்னா நானும் பிராமணன் தான், கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து விளையாடுகிறேன். இந்த கலாச்சாரம் மற்றும் என்னுடன் விளையாடும் சக வீரர்களையும் நான் நேசிக்கின்றேன். நான் இங்கிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா பாய் (எல். பாலாஜி) போன்ற வீரர்களுடன் விளையாடியுள்ளேன். இங்கு சிறந்த நிர்வாகமும், நம்மை பரிசோதித்து கொள்ளும் உரிமையும் உள்ளதால், சென்னை கலாச்சாரம் பிடித்திருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் ரெய்னா பிராமணன் என்று தன்னை அடையாளப்படுத்தி பேசியதற்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சர்ச்சையான பதில்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது, பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ரெய்னா இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும், சென்னை அணிக்காக அவர் கிரிக்கெட் விளையாடியிருக்கலாம், ஆனால் உண்மையான சென்னை கலாச்சாரத்தை அவர் அனுபவித்து இருக்க மாட்டார் என பலரும் கூறி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், முராத்நகரில் பிறந்தவர் ரெய்னா. கடந்த 2002 ஆண்டுமுதல் உள்ளூர் கிரிக்கெட்டுகளில் விளையாடி வந்தார். இதன்பின் 2005-இல் முதல் தேசிய மற்றும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட ஆரம்பித்தார். தன்னுடைய 19 வயதிலே, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தடம் பதித்தார். இதையடுத்து 2010-இல் ஜூலையில் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்தார். 2011-இல் உலககோப்பையை இந்திய அணி வென்றது, அதில் ரெய்னாவிற்கும் முக்கிய பங்குண்டு. இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாகவும் வலம் வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என கடந்த ஆண்டு ஆகஸ்டில், சுரேஷ் ரெய்னா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேலி செய்த தனுஷ் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்த இசையமைப்பாளர்!

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் வரதராஜ் இயக்கும் வெப்தொடர்: டைட்டில் 'குத்துக்கு பத்து'

'பல்லு படாம பார்த்துக்கோ' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் விஜய் வரதராஜ் அடுத்ததாக 'குத்துக்கு பத்து'என்ற வெப்தொடரை இயக்க உள்ளார். யூடியூபில் பிரபலமான

நடிகை பிரியங்கா சோப்ராவின் 39ஆவது பிறந்தநாள்… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை, தற்போது ஹாலிவுட்டில் பிரபலமானவர்,

ஹன்சிகா 53 சுவாரசியம் ..! திரில்லர் கதையுள்ள சிங்கிள் ஷாட் மூவி......!

ஹன்சிகாவின் 53-ஆவது படமாக, ஒரு புதிய திரில்லர் கதையுள்ள சிங்கிள் ஷாட் மூவி அமைந்துள்ளது.

ஹாட்ஸ்டாரில் இருந்து சன் டிவிக்கு மாறிய விஜய்சேதுபதி படம்: விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஒன்றின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் வாங்கி இருந்த நிலையில் தற்போது அந்த படம் சன் டிவிக்கு சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.