சருமத்தில் ஏற்படும் இந்த நிறமி கருத்திட்டும் உடல் நோயின் அறிகுறியா?.

  • IndiaGlitz, [Thursday,April 04 2024]

 

சருமத்தில் ஏற்பட கூடிய கருத்திட்டுகளை போக்க எளிய வழிகள் :

Summer ஸ்டார்ட் ஆகிடுச்சி.முகமெல்லாம் எரிச்சல்,அதிகமான வியர்வை, தழும்புகள்,முகப்பருக்கள்,கரும்புள்ளிகள்,எல்லாமே வரும் அல்லவா ?பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் சருமத்தில் ஏற்படும் இது போன்ற பிரச்சினை ஒரு விதமான மன உளைச்சலை உருவாக்குகின்றன.இதை எல்லாம் தாண்டி ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் என்ற சரும கோளாறும் உள்ளது.உடலில் அங்கங்கு ஏற்படும் இந்த நிறமி நாளடைவில் முகத்திலும் உருவாகின்றன.இது ஏன் ஏற்படுகிறது?என்ன காரணம் ?இதன் விளைவுகள்? இதற்கான தீர்வுகள் பற்றி காண்போம்.

ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் ஏன் யாருக்கு வரும்,

சூரிய ஒளி நம் சருமத்தின் மீது அதிகமாக படுவதன் காரணமாக கூட இந்த நிறமி ஏற்படும்.இங்கு உடலில் சில இடங்களில் திட்டுகளை உருவாக்கும்.அதன் அடுத்த நிலையே முகத்தில் நிறமியாக தோன்றும்.இது எந்த வயதினருக்கும் எந்த வகையான தோல் வகையினருக்கும் ஏற்படும்.ஏற்கனவே தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது மிக எளிதாக வரும்.மேலும் ஆட்டோ இம்யூன் கோளாறுகள் போன்ற காரணங்களால் தோன்றலாம்.

இந்த வகையான நிறமி ஏற்பட காரணம்:

நமது சருமத்தில் இயற்கையாகவே மெலனின் என்ற நிறமி இருக்கிறது அல்லவா,இது சருமத்திற்கு அதன் நிறத்தை அளிக்கும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாத காரணத்தினால் மெலனின் உற்பத்தி செய்ய வேண்டிய செல்கள் சேதமடைந்து இது போன்ற கருத்திட்டுகளை ஏற்படுத்தி விடும்.அதிக சூரிய கதிர்வீச்சு,மெலஸ்மா,சில மருந்துகளின் எதிர்வினை,அடிசன் என்ற அட்ரினல் சுரப்பி கோளாறு நோய், புற்றுநோய்,வளர்ச்சிதை மாற்ற காரணங்கள்,பாதரச விஷம்,போர்பிரியா என்ற கல்லீரல் நோய் போன்றவை அனைத்தும் ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் ஏற்பட காரணம் ஆகும் .

நிறமியின் நோயை கண்டறிதல்:

1.உடல் பரிசோதனை.
2.மருத்துவம் மற்றும் மருந்தின் நிலை அறிதல்.
3.வூட்ஸ் என்ற ஆய்வு.
4.தோல் பரிசோதனை.
5.உடல் ஒவ்வாமை நிலை அறிதல்.


ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் நிறமியின் தடுப்பு நிலை :

1.சூரிய ஒளியின் கதிர்வீச்சில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்வது,
2.ஆரோக்கியமான வாழ்க்கை முறை.
3.அதிக நீர் அருந்துவது,சீரான உணவு பழக்க வழக்கம்.
4.நிலையான தோல் பராமரிப்பு.
5.மருத்துவரின் ஆலோசனைப்படி,தோலுக்கு ஏற்ற சன்ஸ்க்க்ரீன் பயன்படுத்துவது.
6.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள்.
7.தோல் பராமரிப்பு பற்றிய கல்வி மற்றும் புரிதல்.

தோல் நிறமியை சரி செய்ய இயற்கை வைத்தியம்:

1.உருளைக்கிழங்கு சரியான பிளீச்சிங்,எனவே முகத்தில் உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்.
2.லாக்டிக் அமிலம் நிறைந்த தயிரை முகத்தில் தடவலாம்.
3.என்சைம்ங்கள் நிறமியை க்ளோவ் செய்ய பப்பாளியை மாஸ்க் வடிவில் பயன்படுத்தலாம்.


4.இரவில் கற்றாழையை முகத்தில் பயன்படுத்தலாம்.
5.தக்காளி மற்றும் மஞ்சள் பொடியை சேர்த்து நிறமியின் மீது அப்ளை செய்யலாம்.
6.ஆப்பிள் சைடர் வினிகர் பயனப்டுத்தலாம்.
7.வெள்ளரிக்காய் சாப்பிடலாம் மற்றும் முகத்தில் அப்ளை செய்யலாம்.

நிறமியின் மீது தவிர்க்க வேண்டியவை:

எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல் மருந்தை முகத்தில் பயன்படுத்துவது,அவ்வப்போது கையை முகத்தில் வைப்பது,செயற்கையான சோப்பை பயன்படுத்துவது,சுத்தமில்லாத துண்டை முகத்தில் பயன்படுத்துவது,நிறமியை தூண்டும் வகையில் சில எதிர்வினை மாத்திரைகளை பயன்படுத்துவது இது போன்ற தவறுகள் ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் நிறமியை இன்னும் அதிகமாக உருவாக்கும்.எனவே முடிந்தவரை இதை இயற்கை முறையில் கையாள்வது மேலும் யோகா உடற்பயிற்சி,சத்தான காய்கறிகள்,மன அமைதி,புத்தகம் வாசிப்பது என்று தன்னை எப்போதும் ஒரு செயலில் ஆர்வமாக ஈடுபடுத்தி கொள்வது நல்லது.

இந்த டிப்ஸ் அனைவர்க்கும் பயன்படும் என நம்புகிறோம்.

More News

சிவராத்திரி மகத்துவம்: ஞான ஆத்மா பூமிக்கு இறங்கிய நாள்! | ப்ரம்ம குமாரிகள் மகாலட்சுமி

இந்த ஆன்மீக கிளிட்ஸ் வீடியோவில், ப்ரம்ம குமாரிகள் சகோதரி மகாலட்சுமி, சிவபெருமான் மற்றும் சிவராத்திரியின் மகத்துவம் பற்றி விரிவாக விளக்குகிறார்.

சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடம்: டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்திய கடைசி பட குழுவினர்..

எங்கள் 'பிபி 180' திரைப்படத்தின் வில்லனாக நடித்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி என அவர் நடித்த கடைசி திரைப்படத்தின் தயாரிப்பாளர் அதுல் போசாமியா அஞ்சலி செலுத்தி செய்திக்குறிப்பு

'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூவின் அடுத்த தமிழ்ப்படம்.. ஹீரோ இந்த மாஸ் நடிகரா?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அடுத்ததாக தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிக்க

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் வனிதா.. உறுதி செய்த புகைப்படங்கள்..!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் தனது மகள் ஜோவிகா கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை

த்ரிஷா மட்டுமல்ல.. மேலும் சில கேமியோ கேரக்டர்கள்.. 'கோட்' படத்தில் ஒரு சர்ப்ரைஸ்..!

கடந்த சில வருடங்களாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் சில பிரபலங்கள் கேமியோ கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்