'ஹிருதயம்' தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் உள்பட 3 மொழிகளின் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரனவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் உருவான ’ஹிருதயம்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ரூபாய் 6 கோடியில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் வசூல் மட்டும் ரூ 65 கோடி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் பெற்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் விரைவில் இந்த படத்தின் மூன்று மொழிகளின் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.