கொரோனாவில் இருந்து தப்பிக்க பொருட்களை எப்படி கையாள்வது???

  • IndiaGlitz, [Saturday,March 21 2020]


கொரோனா வைரஸ் பொருட்களின்மீது பல மணிநேரம் குடியிருக்கும் தன்மையுடையது என ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எந்தெந்தப் பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தத் தொகுப்பு.

கொரோனா வைரஸ் 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் இந்த வெப்பநிலையில் அனைத்து வைரஸ் துகள்களும் கொல்லப்படுமா?? இதுவும் சந்தேகம். 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் குறைந்தது 15 நிமிடங்களில் 10 ஆயிரம் வைரஸ் கிருமிகள் அழிந்து போகிறது. ஆனால் வெயில் படாத வீட்டுப்பொருட்கள் மற்றும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் பரவும் வைரஸ் கிருமிகளை தடுக்க மிகுந்த எச்சரிக்கை தேவை.

கொரோனா பற்றிய ஆராய்ச்சியை அமெரிக்காவின் National Istitutes of Health நிறுவனம் மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தும்மல், இருமல் போன்றவற்றின்போது வெளியாகும் நீர் துளிகளின் மூலம் காற்றில் பரவவாய்ப்புள்ளது. அப்படி பரவும் நீர்த்துளிகளில் (Droplets) சுமார் 3 மணிநேரம் வரை இந்த வைரஸ் வாழும் தன்மையுடையது என ஆராய்ச்சியில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. எனவே காய்ச்சல், சளி, இருமல், தும்மல் அறிகுறிகள் இருப்பவர்களை விட்டு தொலைவில் இருந்து கொள்வது நலம். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் மற்றவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


காற்றில் பல மணிநேரம் வாழக்கூடிய தன்மையுடையது என்பதால் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகமூடிகளை அணிந்து செல்வது அவசியம். குறைந்தது காற்றில் 3 மணிநேரம் இந்த கொரோனா வைரஸ் வாழும் தன்மையுடையது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள்
பொது போக்குவரத்து, ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் ஜிம்களுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும்போது அங்குள்ள கைப்பிடிகள் மேற்பரப்புகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். உங்கள் சொந்த வீட்டில் உள்ள பொருட்களையும் அதாவது சமையலறை திட்டுகள் முதற்கொண்டு அனைத்து இடங்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவும். மொபைல், லேப்டாப், பீரோ, பணப்பை போன்ற அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அட்டை போன்ற சாதாரண பொருட்களின்மீது படரும் கொரோனா வைரஸ் குறைந்தது 24 மணிநேரம் வாழும் தன்மையுடையது. எனவே வீட்டில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது நல்லது. கடைகள் மால்கள் என வெளியே சென்று வாங்கி வரும் பொருட்களையும், ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களையும் சுத்தப்படுத்தி வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீது பரவும் கொரோனா வைரஸ் கிருமி 2 முதல் 3 நாட்கள் வரையிலும் வாழும் தன்மையுடையது. எனவே வெளியே சென்று வாங்கிவரும் பிளாஸ்டிக், ஸ்டீல் பொருட்களை சுத்தப் படுத்தி எடுத்துக்கொள்ளவும். பெரும்பாலான கைப்பிடிச் சுவர்கள், கதவின் கைப்பிடிகள் பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பொருட்களால் செய்யப் பட்டிருக்கும். எனவே ரயில், இருசக்கர – நான்கு சக்கர வாகனம், பேருந்து, வீட்டின் கதவு, ஜன்னல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் உடனே கிருமிநானிசி உள்ள சானிடைசரை பயன்படுத்துவது நல்லது.


கண்ணாடி பொருட்களின் மீது இந்த வைரஸ் கிருமி 96 மணிநேரம் வாழக்கூடிய சக்தி வாய்ந்தது. எனவே கண்ணாடி பொருட்களை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் அலட்சியம் காட்டவேண்டாம். அதே போல வெளியே செல்லும்போது கண்ணாடியாலான கட்டிடங்களை தொடும்போதும் கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

லேமினேட் செய்யப் பட்ட பொருட்களின் மீதுகூட கொரோனா வைரஸ் கிருமி 4 மணிநேரம் உயிர்வாழக் கூடும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. எனவே புத்தகப் பை, பிளாஸ்டிக்கில் லேமினேட் செய்யப் பட்ட பொருட்கள், பணப்பை, பர்ஸ் போன்ற எந்தப் பொருட்களையும் பாதுகாப்பு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம்.

பொருட்களை தொடாமல் இயல்பான வாழ்க்கையை வாழமுடியாது. ஆனால் பொருட்களை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பொருட்களை பயன்படுத்திய உடனே வாய், காது, மூக்கு, கண் போன்ற எந்த உறுப்புகளையும் தொடக்கூடாது. உடனே கிருமிநாசினி பொருட்களைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது நலம்.
சானிசைடரில் எவ்வளவு ஆல்கஹால் இருக்க வேண்டும்???

சானிடைசர் பொருட்களை குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். குறைந்தது 62 முதல் 71 சதவீதம் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிப் பொருட்கள் மற்றும் சானிடைசர் பொருட்களை முறையாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிருமிநாசினிக்காகப் பயன்படுத்தும் பிளீச், ஃபினால், (உதாரணமாக லைசால்) போன்ற பொருட்களில் சோடியம் குளோரோசைட் கலந்த ஹைட்ரஜன் பெராக்சைட் இருக்கிறதா என்பதையும் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். இந்தவகையான பொருட்களை பயன்படுத்தும்போது கொரோனா வைரஸை விரைவாக அழிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

More News

தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்த காதலர்கள்: அடுத்த நிமிடம் தற்கொலை

ரயில் தண்டவாளத்தில் படுத்தபடியே செல்பி எடுத்துக் கொண்ட காதலர்கள் அடுத்த நிமிடம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆம்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதுதான் கொரோனா வைரஸ் சோதனை செய்யும் லட்சணமா? சஸ்பெண்ட் ஆன அதிகாரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த

கொரோனா வைரஸ் குறித்து 'மாஸ்டர்' நடிகரின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை திரையுலகை சேர்ந்த பலர் பதிவு செய்து வரும் நிலையில் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த் சாந்தனு

நம் எதிரே இரு அறைகூவல்: கொரோனா குறித்து வைரமுத்து

உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று வரை கொரோனா வைரஸுக்கு 258 பேர் பாதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

கொரோனா வைரஸ்: கமல்ஹாசன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகளும், அரசியல் பிரபலங்களும், திரையுலகினரும் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில்