2016 இல் அதிமுக கூறிய வாக்குறுதிகளின் நிலைப்பாடு என்ன? விளக்கும் புது அறிக்கை!

தமிழகத்தில் இருமுறை வெற்றிப்பெற்று பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிமுக சிறப்பான ஆட்சியை வழங்கி இருக்கிறது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு புது வாக்குறுதிகள் பலவவற்றையும் அதிமுக கட்சி தலைமை வெளியிட்டு வருகிறது. அதில் வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை போன்ற வாக்குறுதிகளை அறிவித்து இருக்கிறது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு கூறிய செயல் திட்டத்தின் கலவையாகவே வெளிவந்து இருக்கிறது.

இந்நிலையில் வரப்போகும் தேர்தலை ஒட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக தலைமை வெளியிட்ட வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் முழுதாக முடிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் தற்போதைய நிலைமை என்ன என்பது குறித்தும் அலசப்படுகிறது. அந்த வகையில் வாக்குறுதி அளிக்கப்படாத பல செயல்திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

அதில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியது. ஹார்டுவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வுக்கான ஒரு இருக்கையை ஏற்படுத்தியது ஆகியவை அடங்கும். மேலும் வாக்குறுதி அளித்தப்படி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது, 40 ஆயிரம் கோடி புதிய பயிர்க்கடன் சலுகையை அமலாக்கம் செய்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். உள்நாட்டு நுகர்வோருக்கு மின்சாரத்தில் 100 யூனிட்டுகள் வரை இலவசம், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் மற்றும் பவர்லூம் நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கல் போன்றவை செயல்படுத்தப் பட்டன.

மேலும் 2021 பிப்ரவரி வரை சுமார் 50 லட்சம் விவசாயிகளுக்கு 642,600 கோடி பயிர் கடன்கள் வழங்கப்பட்டன. மிக முக்கியமாக அரசாங்கம் இரண்டாவது சுற்று பயிர்கடன் தள்ளுபடியுடன் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதில் தமிழக மக்களை ஈர்த்த ஒரு திட்டமாக செட்-டாப் பெட்டிகள் வழங்கலும் இருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் திட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 2017 முதல் 35.2 லட்சம் நிலையான வரையறை (எஸ்டி) எஸ்டிபிக்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் விநியோகிக்க பட்டதாக அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

பொது நிர்வாகத்தின் ஒரு முக்கியமான வாக்குறுதியாக தாலுக்காக்கள் மற்றும் வருவாய் பிரிவுகளை உருவாக்குவது ஆகும். ஆறு மாவட்டங்கள் ஒன்பது வருவாய் பிரிவுகள் மற்றும் 32 தாலுக்காக்கள் நிறுவப்பட்டன. அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி நிலம் தொடர்பான சந்தை வழிகாட்டுதல் மதிப்புகள் அளவீடு செய்யப்பட்டன. மேலும் பத்திரப்பதிவு விகிதங்களில் 33% குறைப்பு கடந்த ஜுன் 2017 இல் நடைமுறைக்கு வந்தது.

மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை கொண்டு வந்தது, கொங்கு பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, நீர் ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்பட்டது பேன்றவை இந்த ஆட்சியின் முக்கிய இலக்காக கருதப்படுகிறது. மேலும் அத்திக்கடவு திட்டம், நீர்ப்பிடிப்பு தளங்களில் குடிமராமத்து பணி, 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு பதிலாக 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தது போன்றவை இந்த ஆட்சியின் சிறப்பாகக் கருதப்படுகிறது.

அதோடு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு கொண்டு வந்தது, பிற்படுத்தப்பட்ட வன்னியர் பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறைகளில் 10.5% உள்இட ஒதுக்கீடு கொண்டு வந்தது போன்றவை அதிமுகவின் வெற்றிகரமான செயல் திட்டம் ஆகும்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: முடிவு பெறாத வாக்குறுதிகளைப் பொறுத்தவரை குறைவாகவே இருப்பதாக கணிப்புகள் கூறப்படுகின்றன. அந்த வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச செல்போன கொடுக்காமல் போனது, இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்த முடியாமல் போனது, சில்லறை கோப் ஆப்டெக்ஸ் கடைகளில் பொங்கல் கூப்பன் போன்ற கூப்பன் அட்டைகளை வழங்காமல் விட்டது, அம்மா வங்கி அட்டை செயல் திட்டத்திற்கு பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் நிறைவேற்றாமல் இருப்பது,

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர இயலாமல் இருப்பது, உள்கட்டமைப்பு துறையில் மீனம்பாக்கம் செங்கல்பட்டு இடையே ஒரு உயரமான நெடுஞ்சாலைகான திட்டம் இன்னும் முடிவுபெறாமல் இருப்பது, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய உலகளாவிய முதலீட்டாளர்களின் சந்திப்பை கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே நடத்தியது,

அதோடு கச்சத்தீவை மீட்டெடுப்பது மேலும் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை போன்ற பிரச்சனைகள் முடிவு பெறாமல் இருப்பது போன்ற ஒரு சில வாக்குறுதிகளில் முடிவு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கோரோனா? பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி துவங்கிய லாக்டவுன் கிட்டத்தட்ட 8 மாதங்கள் இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டது.

அப்பா பாஜகவில் இணைந்ததால் நடிகையை நீக்கியதா 'அந்தாதூன்' ரீமேக் படக்குழு?

நடிகையின் தந்தை பாஜகவில் இணைந்ததால் 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்கில் இருந்து அந்த நடிகை நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின்

நாயகிக்கு முக்கியத்தும் தரும் கேரக்டரில் ஸ்ருதிஹாசன்: அடுத்த படம் குறித்த தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்சேதுபதி உடன் 'லாபம்' பிரபாஸுடன் 'சலார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் அஜித், சிம்பு படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்தடுத்த வாரங்களில் அஜித் மற்றும் சிம்பு நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்