அகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன?
- IndiaGlitz, [Friday,February 26 2021] Sports News
அகமதாபாத் மோதேரா மைதானத்தில் நடைபெற்று முடிந்த 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற முன்னணி பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் சில வரலாற்று நிகழ்வுகள் நடந்தத்தைக் குறித்தும் ஊடகங்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன. அதாவது மிக குறைந்த நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்தது என்ற வரிசையில் ஆசிய அளவில் இந்தப் போட்டி முதல் இடம் பெற்று இருக்கிறது.
அதோடு குறைந்த பந்துகள் வீசப்பட்ட போட்டி என்ற வரிசையில் இந்த மேட்ச் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 842 பந்துகளே வீசப்பட்டன. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியா-பங்களாதேஷ்க்கு இடயில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 268 பந்துகளும் கடந்த 2018 இல் இந்தியா-ஆப்கானிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெறும் 1028 பந்துகளும் வீசப்பட்டு உள்ளன. அந்த வகையில் தற்போது நடைபெற்ற இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.
மேலும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களைக் கொடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதோடு இந்திய அணியின் ஸ்பின் பவுலர் அஸ்வின் தனது 77 ஆவது டெஸ்ட் போட்டியில் 400 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல இந்திய அணி கேப்டன் விராட் கோலி அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப்பெற்ற கேப்டன் என்ற சாதனையையும் புரிந்தார்.
இவர் இந்திய மண்ணில் நடைபெற்ற 29 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 21 வெற்றிகளை பெற்று இருக்கிறார். முன்னதாக டோனி 30 போட்டிகளில் 21 வெற்றிகளை பெற்று இருந்தார். அந்த சாதனையை முறியடித்தோடு விராட் கோலி அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையும் படைத்து இருக்கிறார். இப்படி அடுக்கடுக்கான சாதனைகளால் இந்தப் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.