கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது கிரிமினல் குற்றம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்திருக்கிறது.
கேரளாவில் நேற்று ஒருநாள் மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகளுடன் அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் புவனேஸ்வரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பயத்தால் அங்கிருந்து சென்றார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர் கேரளா விமான நிலையத்தில் தனக்கு கொரேனா இல்லை என்று கத்திக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டதாகவும் பின்னர் அவரை காவல் துறையினர் உதவியுடன் வலுக்கட்டாயமாக சோதனைக்கு உட்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக தற்போது கேரள சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கொரோனா பாதித்த பகுதிகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ சென்று திரும்பியவர்கள் தங்களது பயண விவரங்களை மறைப்பது கடும் குற்றமாகக் கருதப்படும் என கடும் எச்சரிக்கை செய்துள்ளார். கொரோனா பாதித்த பகுதிகளுக்குச் சென்ற திரும்பியவர்கள் முறையான சோதனை செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை சோதனை செய்யாமல் கொரோனா இருப்பவர் மற்றவர்களுடன் சகஜமாக தொடர்பு கொள்வது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என அமைச்சர் கூறியுள்ளார்.
கேரளாவில் புதிதாக கொரோனா பாதித்துள்ள 8 பேரில் 2 பேர் ஏற்கனவே கொரோனா இருப்பதாக உறுதி செய்யப் பட்ட 3 வயது குழந்தையின் பெற்றோர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர்கள் இத்தாலியில் இருந்து வந்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout