39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கம்போடியா நாட்டில் எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகளவில் கன்னிவெடிகள் பதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மொத்த எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டும் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கன்னிவெடியில் சிக்கி உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கையும் அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை கன்னிவெடியில் சிக்கி 64 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கின்றனர் என்று ஒரு புள்ளிவிரவக் கணக்கும் வெளியாகி இருக்கிறது.
இந்த அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அரசாங்கமே தற்போது கன்னி வெடிகளை அகற்றவும் முடிவு செய்திருக்கிறது. மேலும் இந்தப் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தும்போது அவர்களுக்கு அதிக ஆபத்துகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் மாற்று வழிகளைக் குறித்து அதிகாரிகள் யோசித்து இருக்கின்றனர். அப்போதுதான் ஆப்பிரிக்காவில் உள்ள மாகவா எலியைப் பற்றிய செய்திகளை கம்போடியா நாட்டு அதிகாரிகள் கேள்விபட்டு ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மாகவா எனும் எலி ஒன்று கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றுவதில் கில்லாடி எனக் கேள்விப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த எலி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்த எலிக்கு கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றும் வகையில் பல்வேறுகட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி பயிற்சி பெற்ற மாகவா எலி வெறுமனே 7 ஆண்டுகளில் 39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
மேலும் வெடிக்காத நிலையில் இருந்த 28 பொருட்களையும் இந்த எலி பாதுகாப்பாக அகற்றி இருக்கிறது. மேலும் கன்னிவெடிகளை அகற்றும் பணியில் மாகவா எலி 1 லட்சத்து 41 சதுர அடி நிலத்தைத் தோண்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த அளவு 2 கால்பந்து மைதானத்திற்கு சமமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாகவா எலிக்கு இங்கிலாந்தில் உள்ள கால்நடை அமைப்பு ஒன்று தங்கப்பதக்கத்தை வழங்கி பாராட்டுத் தெரிவித்து இருக்கிறது. அப்போது வழங்கப்பட்ட பாராட்டு பத்திரத்தில் மனிதர்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதற்கு பாராட்டுகள் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout