மிஷ்கின் என்னும் ராட்சஷ கலைஞன்

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

சித்திரம் பேசுதடி பட போஸ்டரை தினத்தந்தி பேப்பரில் முதன் முறையாகக் கண்டேன். கருப்பு பேக்கிரவுண்டில்  ஐந்து இருட்டு முகங்கள். அதில், சித்திரம் பேசுதடியில் வரும் த், ம் புள்ளிகள் மட்டும் மஞ்சள் நிறத்திலிருந்தது. அந்தப் போஸ்டரே படத்தின் மீதான ஆவலைத் தூண்டியது எனலாம்.

 திரு ,சாரு, திருவின் நண்பர்கள், அண்ணாச்சி, சாருவின் அப்பா என்று படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரையும் அத்தனை கச்சிதமாக வடிவமைத்திருப்பார் அறிமுக இயக்குனர் மிஷ்கின். முக்கியமாக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கேமரா ஒவ்வொரு முகமாக நகர்ந்து சாருவின் அப்பா முகத்தில் வந்து நிற்கும்போது அப்படியே மயிர்க்கூச்செறிந்தது. அன்று முதல் மிஷ்கினின் ரசிகன் ஆனேன்.

மிஷ்கின் படங்களில் வரும் பல விஷயங்களை முதல்முறை பார்க்கும்போது பார்க்கத் தவறி இருப்போம். சித்திரம் பேசுதடி படத்தில் இண்டர்வலுக்கு பிறகு பாவனாவின் அப்பா முகத்தை ஸ்க்ரீனில் காட்டவே மாட்டார். போலவே படம் முழுக்க பாவனாவின் அப்பா எதையாவது துடைத்து கொண்டே தான் இருப்பார். இதற்கான காரணங்களை பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டுவிடுவது மிஷ்கினின் தந்திரம் எனலாம்.


 
மிஷ்கின் மீது மிகப்பெரிய மரியாதை வந்த படம் அஞ்சாதே..சித்திரம் பேசுதடி படம் இரண்டாம் ரிலீஸில் ஹிட் ஆனாலும் மிஷ்கின் பற்றி பலருக்கு தெரியவில்லை அவரின் அடுத்த படம் அஞ்சாதே மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். போலீஸ் குவார்ட்டர்ஸ்,போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றை அஞ்சாதே படத்துக்கு முன் எந்த படமும் இந்த அளவுவுக்கு தத்ரூபமாக காட்டியது இல்லை.சப்பையின் மகன் அப்பா என்று கதறுவதும், பொம்முக்குட்டி என்று ஒரு தந்தை தான் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து நடுங்குவது என காட்சிக்கு காட்சி விளாசியிருப்பார். சத்யா,கிருபா,லோகு,தயா,சப்பை என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அற்புதமாக செதுக்கி இருப்பார் மிஷ்கின். அஞ்சாதே மிஷ்கினின் உச்சம்..
 
மிஷ்கினின் படங்களில் பெரும்பாலும் ரெண்டு பிளாட்கள் இருக்கும் அது இரண்டும் இறுதி கட்டத்தில் ஒரே இடத்தில் வந்து இணையும். அஞ்சாதே படத்தில் நண்பர்களுக்குள் இருக்கும் பிரிவு, பெண்களை கடத்தும் கும்பல் இதை இரண்டையும் கட்சிதமாய் இணைத்து இருப்பார். அஞ்சாதே படத்தில் லோகுவை சத்யா அடித்துவிட்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று விட்டு நடந்துவரும்போது வரும் உரையாடல் 


 
சின்ன பையனை போட்டு அடிச்சா சும்மா இருக்க சொல்றியா?

 நீயே தண்ணி அடிக்க தான் போனே, அங்க என்ன நடந்தா உனக்கென்னடா

தண்ணியடிச்சா? தப்ப தட்டி கேட்க கூடாதா?
 
தப்ப தட்டி கேட்க நீ என்ன போலிஸ்காரனா
 
போலீஸ்காரனா இருந்தா அவன அங்கயே கொன்னிருப்பேன்
 
அப்போ போலீஸ்காரனா ஆகுடா, என் கூட எஸ்.ஐ செலக்ஷன்க்கு வா போலீசாகி அப்புறம் அடிக்கலாம்
 
நா எதுக்கு டா போலீஸ் ஆகணும்? அதான் நீ ஆகபோறியே, நீ போலீசாகி என்ன பண்ண போறேன்னு பார்ப்போம்.
 
நா போலீசான முதல்ல உன்னை ரோட்ல போட்டு சுடுவேன் டா

 இதுதான் படத்தின் இறுதியில் மாறி நடக்கும். சத்யா போலீசாகி கிருபாவை சுடுவான். இந்த ஷாட்டை எடுத்து இருக்கும் விதம் அவ்ளோ அருமையாய் அமைத்து இருப்பார். குறுகலான தெரு சத்யா, கிருபா இருவரும் நடந்துகொண்டே பேசிக்கொண்டு வருவார்கள் டாப் ஆங்கிள் ஷாட் வைத்து இருப்பார் இருவரின் முகமும் தெரியாது. அந்த குறுகலான இருட்டு சந்தில் இருந்து மஞ்சள் கலர் வெளிச்சமான வளைவில் திரும்பும்போது  கிருபா நா போலீசான முதலே உன்னை ரோட்ல போட்டு சுடுவேன் டா என்பான். இருவரும் ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்துகொண்டு பின்னர் சிரித்துகொண்டே தோள் மீது கைபோட்டு நடக்க ஆரம்பிப்பார்கள் அப்போது வரும் இசையை கேளுங்கள். ராட்சஸ கலைஞன் மிஷ்கின் 

சப்பை சாகுமிடம், தயா சாகுமிடம் என்று படத்தில் கெட்டவர்கள் இறந்தாலும் அந்த இடத்திலும் சோக இசையை ஒலிக்க விட்டு இருப்பார். அதுக்கு காரணம் அவர்களும் மனிதர்கள் தான் அவர்களை பாதை மாற்றியது மாற்றியது அவர்களின் சூழலும் இந்த இந்தச் சமூகமும் தான் என்று  அவர்களின் இறப்புக்கும் வருந்தும் கலைஞன் மிஷ்கின்.

 நந்தலாலா இன்னும் ஒரு காவியம். தன் தாயைத் தேடி போய் அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க நினைக்கும் ஒரு சிறுவன், மனநலம் பாதிக்கபட்டவுடன் மருத்துவமனையில் சேர்த்து விட்டு தன்னை பார்க்காத தாயை தேடி கன்னத்தில் அறைய நினைக்கும் உடலால் வளர்ந்தும் மனதால் சிறுவனாய் இருக்கும் ஒருவன். இவர்கள் இருவரின் பயணமே நந்தலாலா. அதில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்,மனிதர்களின் அன்பை தான்  அற்புதமாய் சிருஷிடிக்கபட்ட படம் நந்தலாலா. தாயை அறைய நினைத்தவன் முத்தம் குடுப்பான். முத்தம் கொடுக்க சென்றவன் வேறு ஒரு தாயை தேடிகொள்வான்.  நாம் தியேட்டர்ல பார்த்தது கட் version.அப்படத்தின் uncut version பார்க்கணும்னு ஆசைப்பட்டு இன்னும் தேடி கொண்டே இருக்கிறேன். 
 
மிஸ்கினின் அடுத்த படம் யுத்தம் செய். இதிலும் ரெண்டு பிளாட்கள் இருக்கும். தொலைந்த தங்கயைத் தேடும்  சி.பி.சி.ஐ.டி ஆபிசர், நகரில் நடக்கும் தொடர் கொலைகள். வெட்டப்பட்ட உடல்களை கண்டுபிடிக்க முயல்கிறார். அதன்பின்னால் ஒரு கதை என்று investigative thriller படத்தை  அற்புதமாய் எடுத்து இருப்பார்.

படம் பார்த்த எல்லா நண்பர்களும் யுத்தம் செய் நல்ல படம் வேற யாராவது நடித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். அவர்களிடம் எல்லாம் வாக்குவாதம் செய்து இருக்கிறேன். சேரனை குறை சொல்வது மிஷ்கினை குறை சொல்வது போல JK என்ற கதாபத்திரத்திற்கு சேரனை மிக நுட்பமாக பயன்படுத்தி இருப்பார். சேரனிடம் சென்று அவர் நடித்ததில் சிறந்த படம் எது என்று கேட்டால் அவர் யுத்தம் செய் என்று தான் கூறுவார். அந்த படத்தில் மாரிமுத்து,செல்வா,லக்ஷ்மிராமகிருஷ்ணன்,Y.G.மகேந்திரன்,ஜெயப்ரகாஷ் என்று அனைவரும் அற்புதமாக நடித்து இருப்பார்கள். யுத்தம் செய் கிளைமாக்ஸ் மட்டும் வழக்கமான தமிழ் சினிமா பாணியில் எடுத்து இருப்பார் அது ஒன்று தான் குறை.தமிழில் வந்த மிக சிறந்த த்ரில்லர் படங்களில் யுத்தம் செய்யும் ஒன்று. 


 
மூகமூடி படத்தில் வரும் பார் சாங்கும்,வாய மூடி சும்மா இருடா பாட்டும் அதை எடுத்த விதமும் அவ்ளோ அசத்தலாய் இருக்கும். தமிழில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மையமாக வைத்து அவர் காட்சிபடுத்திய சண்டை காட்சிகள், செல்வாவும் நரேனும் பேசிக்கொண்டே மோதி கொள்வதை எல்லாம் அற்புதமாய் எடுத்து இருப்பார். இது எல்லாம் இருந்தும், திரைக்கதை மிகவும் திராபையாக இருக்கும். அதற்கான காரணத்தை தேடியேபோது தான் படத்தின் தயாரிப்பளார் பிரஷரே அப்படத்தை பப்படமாக்கியது என்ற நம்பதகுத்த வட்டாரங்கள் தெரிவித்தனே.முகமூடி சறுக்கினாலும் அவர் மேல கொண்டே நம்பிக்கை சிறுதும் குறையவில்லை அடுத்து வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டி படத்தில் என் நம்பிக்கையை உண்மையாக்கி வலிமையாக வந்தார் . 

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் மனித மனதில் உள்ள வன்மம்,குருரம்,பேரன்பு,போன்ற பல விஷயங்களையும்,சென்னையின் இரவையும் மிக அழகாக படத்தில் காட்டி இருப்பார். பின்னணி இசையை முன்னணி இசை என்று போட்டு ராஜா என்னும் மாபெரும் மேதைக்கு மிஸ்கின் மரியாதை செய்து இருப்பார்.இரவெல்லாம் அலைந்து,விடியலை பார்க்காமல் இறந்துபோகும் மனித ஈசல்களை செல்லுலாய்டில் அழகாய் செதுக்கியிருப்பார் மிஷ்கின்.  

ஓநாயும் ஆட்டுக்குட்டி படத்திற்கு பிறகு வந்த பிசாசு படத்தில் தெரியாமல் செய்யும் தப்புக்கு மனிதர்களே மன்னிக்க தயங்கும் போது பிசாசு என்னும் தேவதை தவறு செய்தவனை மன்னித்து ஆசிர்வதிப்பது என்னும் கதையை அற்புதமாக எடுத்து இருப்பார். ராதாரவி ரொம்ப நாள் கழித்து அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய படம் பிசாசு. காட்சி மொழி தான் சினிமா அதை மிக சரியாக கை ஆள்பவர் தான் மிஷ்கின் பல இடங்களில் வசனத்தை விட காட்சியில் கன்வே செய்து விடுவார். உதாரணம் அஞ்சாதே படத்தில் அந்த பாட்டி ரத்தத்தில் பூ போடும் இடம் சப்பையின் பையன் அப்பா அப்பா என்று கதறும் இடத்தில சப்பையின் பார்வை.பிசாசுவில் அந்த பச்சை கலர் இது போல எண்ணற்ற காட்சிகள் சொல்லி கொண்டே போகலாம்.

துப்பறிவாளன் படத்தை ஷெர்லாக் கதாபத்திரத்தை எடுத்துக்கொண்டு மிஷ்கின் அவரோட பாணியில் எடுத்து இருப்பார். ஒரு சிறுவன் தான் ஆசையாய் வளர்த்த நாய் இறந்துவிட்டதை சொல்லி அதை யார் கொன்றார்கள் என்பதை கணியன் பூங்குன்றன் என்கிற துப்பறிவாளரிடம் துப்பறிய கொடுக்கிறார். அதை தேட போய் இன்னும் பல வீபரீதங்கள் , முடிச்சுக்கள், சிக்கல்கள் வருகிறது அதை கணியன் எப்படி சால்வ் செய்கிறார் என்பதே இப்படம்.மிஷ்கின் ஆகசிறந்த கதைசொல்லி மிஷ்கினின் அனைத்து படங்களில் ஒரு டிராவல் இருக்கும். அது  துப்பறிவாளனிலும் இருக்கிறது. துப்பறிவாளன் படத்தில் மிகவும் ரசித்த காட்சி மல்லிகா ஒட்டுகேட்குமிடம் அதை கணியன் ஒட்டு கேட்காதேன்னு சொல்லி அப்போ மிஷ்கினின் குரலில் வரும் பாடல். கணியன் கோவப்பட்டு கொண்டே மல்லிகாவின் கையில் முத்தமிடும் இடத்தில் அவள் முகத்தை காட்டவே மாட்டார். காட்சிக்கு எது தேவையோ அதை வைப்பதில் மிஷ்கின் வல்லவர்.  
 
சினிமாவில் மொத்தம் 24 கிராப்ட்ஸ் இருக்கிறது. மியூசிக், கேமரா கோணங்கள்,கலை இயக்கம், சண்டை கோரியக்ராப்,எடிட்டிங் என்று நீண்டு கொண்டே போகும். அந்த மொத்தம் 24 கிராப்ட்ஸ் திறம்பட அறிந்த ஒருவரால் தான் துப்பறிவாளன் போல ஒரு படம் எடுக்க முடியும் .மிஷ்கின் லோகஷன் செலக்ஷன் ஒவ்வொரு படங்களில் பிரமிக்க வைக்கிறது. சென்னை நகருக்குள் இரவில் நடக்கும் சேசிங், கிளைமாக்ஸில் வரும் பிச்சாவரத்தை காட்சிபடுத்திய விதம் astonishing. மிஷ்கின் இப்படத்தின் காட்சிகளை எப்படி தன் மனதில் படமாய் நினைத்து எழுதி இருப்பார், அதை விசுவலாய் உருவாக்கி இருப்பார் என்று யோசித்தாலே அவரின் திறமை பளிச்சிடுகிறது.

மிஷ்கினிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவர் படத்தின் ஆரம்ப ஷாட்கள் சித்திரம் பேசுதடியில் இருந்து துப்பறிவாளன் வரை படத்தின் முதல் ஷாட் பாருங்க இது எந்த மாதிரியான படம்ன்னு முதல் காட்சியிலே ரசிகர்களுக்கு புரியவைத்து விடுவார்.சரியாய் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் கதை ஆரம்பித்து விடும். அதைவிட மிஷ்கின் படங்கள் எல்லாமே பாசிடிவ் முடிவுகள் கொண்டது வாழ்க்கை மீது நம்பிக்கையை துளிர் விடுகிற முடிவை தான் படத்தில் கிளைமாக்சாக வைத்து வைப்பார்.  போலவே மிஷ்கின் படங்களில் வரும் சண்டைக்காட்சிகளும். புதுமையான யுக்திகளுடன், கேமரா கோணங்களுடன் கிரியேட்டிவிட்டி கலந்து அட்டகாசமான அனுபவமாக இருக்கும். மிகுந்த பொருட்செலவுடன் எடுக்கப்படும் பெரிய பட்ஜட் பட சண்டைக்காட்சிகள் எதுவும் மிஷ்கின் பட சண்டைக்காட்சிகளுக்கு அருகில் கூட வராது.
 
மிஷ்கின் அற்புதமான இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், நல்ல வசனகர்த்தா இதை தாண்டி தேர்ந்த பாடகர், அற்புதமான இசை ஆர்வம் உடையவர். இதையெல்லாம் விட மிஷ்கின் அபாரமான நடிகன். நந்தலாலா, சவரக்கத்தி படத்தை பார்த்தவர்களுக்கு புரியும்.மிஷ்கின் கதையை திருடி கூட யாராலும் மிஸ்கின் போல படம் எடுக்க முடியாது. அதுதான் மிஷ்கினின் பலம். ஒரு வரி கதையை வைத்து மலையாளத்தில் அபாரமான சினிமாக்கள் வருகிறதுன்னு காட்சி வாரியாக சிலாகிக்கிறோம் அதை தமிழில் செய்யும் ஒரே திரைகலைஞன் .  I am proud to be a Myskin Fan.  சிப்பிக்குள் இருக்கும் முத்து போன்ற அபாரமான கலைஞன் மிஸ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Happy Birthday Myskin.Love You 

-  Sarath babu

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் மெலடி இசையமைப்பாளர்

கோலிவுட் திரையுலகில் சமீபத்தில் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை செய்த மெலடி இசையமைப்பாளர் டி.இமான், விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு: ஏன் தெரியுமா?

காமெடி நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி! பெரும் பரபரப்பு

சின்னத்திரை நடிகை நிலானி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சபாண்டவிகளுக்கு மத்தியில் பாலாஜி: கஸ்தூரியின் டுவீட்டுக்கு நெட்டிசன்கள் விளாசல்

பிக்பாஸ் வீட்டில் தற்போது யாஷிகா, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய ஐந்து பெண்களும் ஒரே ஆண் போட்டியாளராகிய பாலாஜியும் உள்ளனர்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தயாரிப்பாளர் தாணுவின் தாராள உதவி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் கூட்டமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகம் சென்னை அண்ணா சாலையில் உள்ளது