இந்தியாவுக்கு சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொரோனா தடுப்பு நிதி!

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது தாய்நாடான இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு நிதியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ‘கிவ் இந்தியா’ என்ற அமைப்பின் மூலம் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதியுதவி செய்துள்ளதாகவும் இந்த பணத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தினக்கூலி குடும்பங்களுக்கு உதவும்படி சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ‘கிவ் இந்தியா’ அமைப்பு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை மீட்க சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கியுள்ளது என்பதும் இதில் 200 மில்லியன் டாலர் தொகை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 1173ஆக உயர்ந்தது

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில்

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை பார்த்த 6 வயது மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை ஒரு மாதத்திற்கு பின் பார்த்த 6 வயது மகள் பாசத்துடன் ஓடிவந்து கட்டியணைத்து கதறி அழுத காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்கணுமோ? சதீஷ் வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்

சமீபத்தில் திருமணமான நடிகர் சதீஷ் தற்போது கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

ட்ரோன் மூலம் போதை வஸ்து விற்பனை செய்த இருவர் கைது!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த 20 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தவிர

கொரோனா எதிரொலி: தளபதி விஜய்யின் மிகப்பெரிய மனவருத்தம்

கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து திரை நட்சத்திரங்களும் தங்களுடைய