இந்தியாவுக்கு சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொரோனா தடுப்பு நிதி!
- IndiaGlitz, [Monday,April 13 2020]
கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது தாய்நாடான இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு நிதியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ‘கிவ் இந்தியா’ என்ற அமைப்பின் மூலம் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதியுதவி செய்துள்ளதாகவும் இந்த பணத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தினக்கூலி குடும்பங்களுக்கு உதவும்படி சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ‘கிவ் இந்தியா’ அமைப்பு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை மீட்க சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கியுள்ளது என்பதும் இதில் 200 மில்லியன் டாலர் தொகை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.