டென்னீஸ்க்கு குட்பை!!! – அசத்தல் நாயகி மரிய ஷெரபோவோ
Send us your feedback to audioarticles@vaarta.com
திறமையான ஆட்டம், அசத்த வைக்கும் சர்வ்கள், சொக்க வைக்கும் அழகு என அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறும் ரஷ்ய டென்னீஸ் வீராங்கனை மரிய ஷெரபோவோ தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
32 வயதான மரிய ஷரபோவோ “வாக் அண்ட் வேனிட்டி ஃபேர்” இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில் ”தனது உடல் காயங்கள் தனக்கு பெரும் கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்து இருந்தார். நீண்ட காலமாக தோள்பட்டை காயங்களால் அவதிப் பட்டு வந்தார். இதனால் பல போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தனது 17 வயதிலேயே முதல் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். தனது ஆரம்ப நாட்களில் உலகிலேயே உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரசிகர்களை அதிர வைத்தார். பின்னர் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். விம்பிள்டன், ஆஸ்திரேலியா ஓபன், மற்றும் யு.எஸ். ஓபன் தொடர்களையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பிரெஞ்சு ஓபன் தொடரையும் இவர் வென்றிருக்கிறார். உலகிலே அதிகமாக சம்பாதிக்கும் டென்னீஸ் வீரர்களின் பட்டியலில் பல ஆண்டுகள் வலம் வந்தார். 2016 இல் ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் போது ஊக்கமருந்து சோதனையில் மாட்டிக் கொண்ட இவருக்கு 2 ஆண்டுகள் தடையும் விதிக்கப் பட்டு இருந்தது. தடை காலத்துக்கு பிறகு தொடர்ந்து டென்னீஸ் போட்டிகளில் பங்கு பெற்ற ஷரபோவோ தற்போது ஓய்வினை அறிவித்து இருக்கிறார்.
“எனது உடலில் அதிகரித்து வரும் காயங்களால் எனது உடல் நலனை பாதுகாக்க முடியவில்லை. எனவே இந்த முடிவினை எடுத்து இருக்கிறேன். என் வாழ்வில் டென்னிஸ் மிகவும் மதிப்புடையது. என்னை மன்னித்து விடுங்கள். டென்னிஸிலிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன்” எனத் தனது ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார் ஷரபோவோ. இது தற்போது டென்னீஸ் அரங்கில் பலரால் அதிர்ச்சியுடன் பார்க்கப் பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout