சென்னையை நோக்கி வருகிறது 'கஜா' புயல்

  • IndiaGlitz, [Sunday,November 11 2018]

 

வங்கக்கடலில் உருவாகி சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் புயலுக்கு 'கஜா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 5.30 மணி அளவில் புயலாக மாறிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில நாட்களில் சென்னை உள்பட வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது

கஜா புயல் காரணமாக, நாளை காலை முதல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், நவம்பர் 14ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வரும் 15ஆம் தேதி சென்னைக்கும் ஆந்திராவுக்கும் இடையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த புயலுக்கு 'கஜா' என்று தாய்லாந்து நாடு பெயர் வைத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, மாலத்தீவு, ஓமான், பாகிஸ்தான் , மியான்மர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஏற்கனவே பெயர்களை தேர்வு செய்து பதிவு செய்துள்ளன. இந்த பெயர்கள் வரிசையாக வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரும் புயலுக்கு தாய்லாந்து வைத்த 'கஜா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கஜா' என்றால் 'யானை' என்று பொருள். இந்த புயல் சாதாரண யானையா? அல்லது மதம் பிடித்த யானையா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்

More News

ஊருக்கு சென்ற மனைவி! மகளை கர்ப்பாமாக்கிய கொடூர தந்தை

மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில் பெற்ற மகளை பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனார்.

விஷாலின் டேட்டிங் அனுபவமும் மீடூ பிரச்சனைகளும்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக மீடூ பிரச்சனை குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் 'சில பெண்களுடன் தானும் டேட்டிங் சென்றுள்ளதாகவும்,

'சர்கார்' பிரச்சனை குறித்து முதல்முறையாக கருத்து கூறிய முதல்வர் ஈபிஎஸ்

விஜய் நடித்த 'சர்கார்' குறித்து கிட்டத்தட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் விமர்சனம் செய்துவிட்டனர்.

'தல'யுடன் புகைப்படம்: வாழ்நாள் கனவு நிறைவேறியதாக விக்னேஷ் சிவன் டுவீட்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்நாள் கனவு ஒன்று நனவாகிவிட்டதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஆம், 'தல' தோனியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகம் செய்த நல்ல விஷயங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் ஓரிரு காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் செய்கின்றனர்.