ஊரடங்கில் கொடூரம்....! பொள்ளாச்சியில் மற்றுமொரு சம்பவம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொள்ளாச்சியில் தந்தையே மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில், கட்டிடத்தொழிலாளியாக பணி புரிந்து வருபவன், கடந்த சில மாதங்களாக தனது சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளான். அச்சிறுமிக்கு 13 வயதே நிரம்பியுள்ளது. இதனால் கணவரை கண்டித்த மனைவி, தன் மகளை அழைத்துக்கொண்டு போய் 2 மாதங்களாக தனியே வசித்து வந்துள்ளார். இந்த இக்கட்டான சூழலிலும் மனைவி, மகளுக்கு மன உளைச்சல் தனதுள்ளான் இந்தக் கொடூரன். இதனால் பாதிக்கப்பட்ட பெண் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கட்டிடத் தொழிலாளி மீது வழக்குப்பதிவு, காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . அவனிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. கோவை நீதிமன்றத்தில் குற்றவாளியை முன்னிறுத்திய மகளிர் காவல் துறையினர், இதன் பின் அவனை சிறையில் அடைத்தனர். தந்தையே தனது சொந்த மக்களை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் கோவை மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout