கொரோனாவிற்குப் பிறகு 4 வாரத்தில் 4,000 கோடி வசூலித்த மாஸ் திரைப்படம்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு Fast&Furious சீரிஸ் வரிசையில் வெளியான F9- The fast saga எனும் ஹாலிவுட் திரைப்படம் வெறும் 4 வாரத்தில் 4,000 ஆயிரம் கோடிகளை வசூலித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் திரைப்படம் கொரோனா நேரத்தில் இதற்கு முந்தைய திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் சில நாடுகளில் மட்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி திறக்கப்பட்ட திரையரங்குகளில் கடந்த மே 19 ஆம் தேதி ஒரு சில நாடுகளில் மட்டும் F9- The fast saga திரைப்படம் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் கடந்த ஜுன் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. 4 வாரங்களைக் கடந்தப் பின்பு இந்தப் படம் அமெரிக்காவில் மட்டும் 141 மில்லியன் டாலர்களை வசூலித்து இருக்கிறது. இதேபோல அமெரிக்காவில் 7 வாரங்களுக்கு முன்பு வெளியான “தி கொயட் பிளேஸ்2” திரைப்படம் இதுவரை 150 மில்லியன் டாலர்களை வசூலித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சில நாடுகளில் F9- The fast saga திரைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 401 மில்லியன் டாலர் வசூலை பெற்று இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக சீனாவில் மட்டும் 203 மில்லியன் டாலர் வசூலை பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் இதுவரை 542 மில்லியன் டாலர் வசூலைப் பெற்ற F9- The fast saga திரைப்படம் அதன் முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்க முடியாது என்றே கருத்துகள் வெளியாகி இருக்கின்றன.

காரணம் Fast&Furious சீரிஸின் 7 ஆவது திரைப்படம் 1.515 பில்லியன் வசூல் சாதனையை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா நேரத்தில் 9 ஆவது சீரிஸ் அத்தனை பெரிய வசூலை பெற முடியாது. ஆனாலும் கொரோனாவிற்கு பிறகு வெளியான அதிக வசூல் சாதனை படைத்த முதல் படம் என்ற வகையில் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

More News

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆணுறை வழங்கும் பள்ளிகள்! என்னதான் நடக்குது?

அமெரிக்காவின் சிகாகோ மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளே ஆணுறைகளை வழங்கி வருகின்றன.

வருஷத்தில் 300 நாட்களை தூக்கத்திலேயே கழிக்கும் விசித்திர மனிதன்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கும்பர்கர்ணனுக்கு ஈடாக ஒரு வருஷத்தில் 300 நாட்களை தூக்கத்திலேயே கழித்து வருகிறார்.

8 ஆண்டுகளுக்கு முன்பே காருக்கு வரி கட்டிவிட்டாரா விஜய்? வைரலாகும் ரசீது!  

தளபதி விஜய் வரி பிரச்சனை குறித்து இன்று நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பும், அவருக்கு நீதிமன்றம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே 

'தலைவி' ரிலீஸ் எப்போது? கங்கனா ரனாவத் தகவல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார் 

ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ்: வைரல் வீடியோ

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியாக இருக்கிறார் என்பதும் 'தடக்' என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த அவர் தற்போது 3