பத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்!!! காரணம் தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகப் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை திருப்பி கொடுக்க உள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது எனக் கூறியதோடு, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட விருதினை வேண்டாம் என திருப்பி அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாதலுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம் விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வட மாநிலங்களில் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி பகுதியில் பேரணியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்ட்ம் 8 ஆவது நாளாக வலுவடைந்து வருகிறது. போராட்டங்களுக்கு இடையில் அதை மட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடருவதாகவும் விவசாயிகள் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இப்பிரச்சனைக்கு சமூகத் தீர்வு காணும் வகையில் மத்திய வேளாண் மந்திரி என்.எஸ்.தோமர் தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப் படவில்லை. இதனால் போராட்டம் மேலும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் விவசாயத் தங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக 35 க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகப் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் விவசாய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை திருப்பி அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குமுன்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கனட அதிபர் ஜஸ்டின் ப்ரூடோ ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments