ரசிகர்களை ஏமாற்றிய ஃபகத் பாசில் திரைப்படம்… ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக வரவேற்பை பெற்ற நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் நடித்த “மாலிக்“ திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் தற்போது ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா நேரத்தில் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசிலின் “மாலிக்” திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக ஃபகத் பாசில் நடித்த “See You Soon” மற்றும் “ஜோஜி” எனும் இரு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் இரண்டுமே குறைந்த பட்ஜெட்டில் ஓடிடி தளத்திற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் “மாலிக்” திரைப்படம் வித்தியாசமான அரசியல் கதை கருவை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்காப்பட்டது. அதோடு ஃபகத் நடிப்பில் உருவான “Take off”, “See You Soon” போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்தனை எதிர்ப்பார்ப்பு கொண்ட “மாலிக்” திரைப்படம் தற்போது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்து வருகிறது. மேலும் “மாலிக்“ படத்தை தயாரித்த ஆன்டே ஜோசப், நடிகர் பிருத்விராஜ் நடித்த “கோல்ட் கேஸ்“ எனும் திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் மலையாளத்தில் ஒரே நேரத்தில் இரு பெரிய நடிகர்களின் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com