ரசிகர்களை ஏமாற்றிய ஃபகத் பாசில் திரைப்படம்… ஓடிடியில்  வெளியாகும் எனத் தகவல்!

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக வரவேற்பை பெற்ற நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் நடித்த “மாலிக்“ திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் தற்போது ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நேரத்தில் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசிலின் “மாலிக்” திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக ஃபகத் பாசில் நடித்த “See You Soon” மற்றும் “ஜோஜி” எனும் இரு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் இரண்டுமே குறைந்த பட்ஜெட்டில் ஓடிடி தளத்திற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் “மாலிக்” திரைப்படம் வித்தியாசமான அரசியல் கதை கருவை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்காப்பட்டது. அதோடு ஃபகத் நடிப்பில் உருவான “Take off”, “See You Soon” போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்தனை எதிர்ப்பார்ப்பு கொண்ட “மாலிக்” திரைப்படம் தற்போது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்து வருகிறது. மேலும் “மாலிக்“ படத்தை தயாரித்த ஆன்டே ஜோசப், நடிகர் பிருத்விராஜ் நடித்த “கோல்ட் கேஸ்“ எனும் திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் மலையாளத்தில் ஒரே நேரத்தில் இரு பெரிய நடிகர்களின் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கலக்கப் போகும் தென்னிந்தியப் படங்கள்!

பிரசித்திப் பெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா 2021, இன்று முதல் துவங்கி வரும் ஜுன் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலில் ஏற்கும் வித்தியாசமான கதாபாத்திரம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின்னர் 'பண்ணையாரும் பத்மினியும்' 'காக்கா முட்டை

விஷால் புகார் குறித்து கூலான பதில் கூறிய ஆர்பி செளத்ரி!

நடிகர் விஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தி நகரில் உள்ள காவல்துறை இணை ஆணையரிடம் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது புகார் ஒன்றை அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பி டீக்கடைக்காரர் வைத்த வேண்டுகோள்… இணையத்தில் வைரல்!

மகாராஷ்டிராவை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100ஐ மணி ஆர்டரில் அனுப்பி வைத்ததோடு ஒரு கடிதத்தையும் அனுப்பி உள்ளார்.

நேற்று ஓபிஎஸ்...இன்று ஈபிஎஸ்...! போட்டி போடும் போஸ்டர்கள்....!

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக, நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது.