எனக்கா ரெட் கார்டு, எடுத்து பாரு என் ரெக்கார்டு? சிம்பு

  • IndiaGlitz, [Friday,November 23 2018]

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த சிங்கிள் பாடலின் தொடக்க வரி, 'எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு என் ரெக்கார்டு' என்று ஆரம்பிக்கும் வகையில் உள்ளது. இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்த சிம்பு இந்த பாடலை தான் எழுதவில்லை என்று கூறியதோடு இந்த பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி சூப்பராக இசையமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' திரைப்படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கு ரெட் கார்டு விதிக்க வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் இப்படி ஒரு சிங்கிள் பாடல் வெளிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

'விஸ்வாசம்' படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: டிரண்ட் ஆக்கிய அஜித் ரசிகர்கள்

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம், இரண்டு வருடம், ஐந்து வருடம், பத்து வருடம் ஆகியதை கொண்டாடி வரும் வழக்கம் தற்போது சினிமா ரசிகர்களிடையே டிரண்ட் ஆகியுள்ளது.

50வது நாளை காணும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன படங்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அதில் உண்மையான வெற்றி பெறும் படங்கள் விரல்விட்டு எண்ணும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் இடம்பிடித்த ஓவியா, தற்போது 'காஞ்சனா 3', '96ml', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் களவாணி 2'

ரஜினியுடன் இணையும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும்

4 ரூபாய்க்கு சாப்பாடு: பிரபல நடிகை தொடங்கிய ஓட்டல்

முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகத்தில் ரூ.1க்கு இட்லி, 2 சப்பாத்தி 3 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம்