டி20 போட்டிகளில் முதல் முறையாக ஒருவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான டுவெய்ன் பிராவோ டி20 போட்டிகளில் முதல் முறையாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 36 வயதான டுவெய்ன் பிராவோ டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கரீபியன் தீவுகளில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் (சி.பிஎல்) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைட்ர்ஸ் அணிக்காக பிராவோ விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டிரின்பாகோ வீரர் டுவெய்ன் பிராவோ வீசிய பந்தில் லூக்கா அணியின் கார்ன்வெல் போல்ட் ஆகி வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றிருக்கிறார்.
மேலும் கரிபியன் பிரீமியர் லீக்கில் முதல் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையும் இவரையே சேரும். அதைத்தவிர டி20 போட்டிகளில் இதுவரை யாரும் 400 விக்கெட்டுகளைத் தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக இலங்கை வீரர் லசித் மலிங்கா டி20 போட்டிகளில் 390 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments