திமுக கழகத்தின் அடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகன்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுகவின் பொதுச் செயலாளராக 1977 முதல் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவை யொட்டி திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி பலரது கண்களை உறுத்திக் கொண்டு இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
கட்சியின் தலைவர் பதவிக்கு அடுத்து பெரிய பொறுப்பாக பொதுச் செயலாளர் பதவி மதிக்கப் படுகிறது. இந்நிலையில் திமுகவின் பொருளாளராகப் பதவி வகித்து வந்த துரைமுருகன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாகவும், அந்த விருப்பத்தை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் திமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விலகல் கடித்தத்தை அளித்துள்ளார். அவரது விலகலை ஏற்றுக் கொள்வதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 29 ஆம் தேதி கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் பதவி, கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் கட்சியின் மூத்த உறுப்பினர் துரைமுருகன் பொதுச் செயலாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுவார் எனக் கூறப்படுகிறது. கட்சியின் பொருளாளர் பதவிக்கு எ.வ. வேலுவின் பெயர் பரிந்துரைக்கப் படும் எனவும் அக்கட்சியினர் மத்தியில் பேசப் பட்டு வருகிறது.
ஆனால், பொதுச் செயலாளர் பதவியை டி.ஆர். பாலு விரும்புகிறார் என்றும், அதேபோல, பொருளாளர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் பொன்முடி இருப்பதாகவும் ஒரு பக்கம் செய்திகள் உலா வருகின்றன. மேலும், கனிமொழியின் ஆதரவாளர்கள் கட்சிப் பொறுப்பில் அவருக்கு உயரிய பொறுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments