என்ன நடந்தது துபாயில்!தமிழ்நாட்டையும் தொடருமா இந்த ஆபத்து?

  • IndiaGlitz, [Monday,April 22 2024]


திடீரென அந்த நாட்டை மட்டுமில்லாமல் மற்ற நாடுகளையும் அச்சுறுத்திய பதபத வைக்கும் துபாய் பெருவெள்ள வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவியது.என்ன காரணம்?எப்படி நடந்தது?யார் இதன் பின்னணி ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக,துபாயில் ஏற்பட்ட பெருவெள்ளம் அனைவரையும் பயத்திற்கு உள்ளாக்கியது.இதற்கு செயற்கை மழை தான் காரணம் என கூறப்படுகிறது.பூமிக்கு செயற்கையாக மழையை கொண்டு வர முடியுமா என்பதற்கான கேள்விக்கு இந்த துபாய் வெள்ளமே பதில் ஆகும்.புதிய தொழில்நுட்ப முறையில் செயற்கையாக மழையை கொண்டு வருவதற்கான முயற்சியின் விளைவே இதுவாகும்.1984இல் நடிகர் எம்.ஜி.ஆர் இந்த யோசனையை பயன்படுத்தி செயற்கையாக பூமிக்கு மழை பொழிய செய்தார்.

செயற்கையான முறையில் மழையை கொண்டு வர முடியுமா?அது எந்த அளவுக்கு சாத்தியம்?தொழில்நுட்ப முறையில் மேக விதைப்பு என்ற முறையின் மூலம் இதை கையாளலாம்.துபாயில் இந்த முறையை சில வருடங்களாகவே முயற்சி செய்து வருகின்றனர்.அப்போது நாட்டின் சில பகுதிகளில் இந்த மேக விதைப்பை மேற்கொள்கின்றனர்.

தமிழ் நாட்டில் கோடைகாலத்தில் வெயில் சராசரியாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும்.ஆனால் துபாயில் 50 டிகிரிக்கும் மேலாக வெயிலின் தாக்கம் இருக்கும்.எனவே இந்த மாதிரியான நேரத்தில் மேக விதைப்பு என்ற முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழையை வர வைப்பது ஒரு வழக்கமாகவே உள்ளது.இது சீனா,சௌதி அரேபியா மற்றும் ஏமன் போன்ற பகுதியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியாவிலும் சில பகுதிகளில் மட்டும் இதை முயற்சித்துள்ளனர்.

முதலில் மேகத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.பிறகு அழுத்தம் கொடுக்க வேண்டும்.செயற்கை மழையை உருவாக்க மேகத்தில் செலுத்தப்படும் கெமிக்கல் மூலம் அதில் ஒரு நீர் துளியை உறைய வைக்கும்.அப்போது அவை கரு மேகங்களாக மாறும்.பிறகு பனிக்கட்டியுமாக உருகும்.இதன் மூலம் நமக்கு தேவையான மழை கிடைக்கும்.

எனவே இந்த முயற்சியினால் தான் துபாயில் வெள்ளம் வந்தன என்பது அனைவரின் எண்ணம்.ஆனால் அந்த நாட்டின் வானிலை அறிக்கை அரேபிய கடற்கரையில் ஏற்பட்ட புயல் தான் இந்த மழை மற்றும் வெள்ளத்திற்கான காரணம் என கூறுகின்றனர்.எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது அந்த நாடும் நாட்டு மக்களும் தான்.உண்மையிலே இது போன்ற செயற்கை மழை பொழிவு சரி தானா ?என்ற கருத்தை தெரிவிக்கவும்.