கத்திப்பட பாணியில் சிறையில் சுரங்கம் தோண்டி… தப்பிய மரணத் தண்டனை கைதி!!!

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

 

இந்தோனேசியாவில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட சீன கைதி ஒருவர் கத்திப்பட பாணியில் சுரங்கம் தோண்டி தப்பித்தச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த செய்தி வெளியிட்ட ஊடகங்கள் இதுமுதல் தடவை அல்ல, இரண்டாவது முறை எனக்கூறி மேலும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளன. அந்த நபர் போதைப்பொருள் கடத்த விவகாரத்தில் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கத்திப் படத்தில் ஹீரோ விஜய் வெறுமனே ப்ளூ பிரிண்டைப் பார்த்து சுரங்கத்தின் வழியாகத் தப்பிச்சென்ற கைதியைப் பிடித்துக் கொடுப்பார். அதே சாக்கில் அவரும் தப்பிச் சென்று போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விடுவார். அதேபோல இந்தோனேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் 30 மீட்டர் வரைக்கும் சிறையில் சுரங்கம் தோண்டி அதன் மூலம் தப்பித்து இருக்கிறார்.

30 மீட்டர் என்பது தனி ஒருவரால் சாத்தியமான காரியம் அல்ல. ஆனால் அந்தக் கைதி இதைத் தனியாகத்தான் செய்திருக்கிறார். காரணம் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிக்க மற்ற கைதிகளை வைத்து சுரங்கம் தோண்ட முயற்சித்தபோது மாட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் இந்தமுறை சோலாவாக சிறையின் அறைக்குள் சுரங்கத்தைத் தோண்டி நகரக் கால்வாய் ஓட்டை வழியாகத் தப்பித்து இருக்கிறார்.

மேலும் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு குளிக்கும் அறையில் வெறும் 2.5 மீட்டர் சுவரைத் தோண்டி சிறையில் இருநது தப்பித்துச் சென்றிருக்கிறார். ஆனால் 3 நாட்கள் கழித்து மேற்கு ஜாவா தீவில் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை அப்படி நடக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் அதிகாரிகள் அச்சத்தை தெரிவித்து உள்ளனர்.

இந்தோனேசிய சிறைகளில் கைதிகள் அதிகமாக அடைக்கப் பட்டுள்ளதால் அவ்வபோது கைதிகள் தப்பிக்கும் சம்பவம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018 இல் பிராத்தனை கூட்டத்திற்கு நடுவே சுவரை உடைத்துக் கொண்டு 90 கைதிகள் தப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2017 இல் ரியாவ் மாகாண சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பியதாகவும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.