மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

  • IndiaGlitz, [Friday,February 02 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் இறங்கி 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த பேரவையில் இருந்த தீபாவின் கணவருக்கும், தீபாவின் கார் டிரைவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தீபாவின் கணவர் தனிக்கட்சி ஆரம்பித்தார். இதனால் டிரைவர் ராஜாவின் கை, தீபா பேரவையில் ஓங்கியது

இந்த நிலையில் சமீபத்தில் டிரைவர் ராஜாவை கட்சியில் இருந்து தீபா நீக்கினார். இருப்பினும் டிரைவர் ராஜா ஒரு வழக்கில் சிக்கியபோது அவருக்கு ஆதரவாக போலிசாரிடம் தீபா வாக்குவாதம் செய்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி ஒன்றை தனது பேரவையில் அளித்துள்ளார். இன்று முதல் ராஜா, தலைமை நிலைய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

More News

ஓவியாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த முன்னணி நடிகர்

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான களவாணி படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன்பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தபோதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியால் உலக தமிழர்களிடையே பெரும்புகழ் பெற்றார்.

ஓடும் ரயிலில் நடிகைக்கு பாலியல் தொல்லை: உதவிக்கு வராத சக பயணிகள்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை சனுஷா. இவர் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்

மத்திய பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் காட்டமான விமர்சனம்

கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாகவும், மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளதாகவும் கூறிய கமல்,

ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துள்ளோம்: பட்ஜெட் குறித்து தமிழிசை

தமிழிசை செளந்திரராஜன்: இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம்.விரைவில் அதை நடக்க வைப்போம்

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை! இருப்பினும் ஒரு சிறு ஆறுதல் என்ன தெரியுமா?

இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது ஒரு ஏமாற்றமே.