பிரியாணி சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா? மருத்துவ நிபுணரின் அலர்ட் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,March 03 2021]
இன்றைய உணவு முறைகளில் மிகவும் ஈர்த்த ஒரு உணவாக பிரியாணி இருந்து வருகிறது. இப்படி இருக்கும்போது அந்த பிரியாணியைச் சாப்பிடுவதால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதைக் குறித்து மருத்துவ நிபுணர் ராஜா நமக்கு விளக்கமாக கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
உணவு முறை என்றாலே அதில் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பது மருத்துவர் ராஜாவின் கருத்தாக இருக்கிறது. இதற்கு மாறாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ஹைப்பிரட் காய்கறி மற்றும் பழங்கள் பெரிதும் உடலுக்கு நன்மையை தருவதில்லை என அவர் குறிப்பிடுகிறார். இப்படி பயனே இல்லாத உணவுப் பொருட்களைத்தான் மக்கள் தேடி தேடி விலைக்கொடுத்து சாப்பிடுகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உணவு முறைகளைப் பொருத்தவரை ஒருநாளில் ஒரு வேளையாவது உணவு எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட வேண்டும். காரணம் அப்போதுதான் கலோரி இல்லாத ஒரு நிலையை உடலால் உணர முடியும். அப்படி இல்லாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அதிக கலோரிகளால் உடல் எப்போதும் அல்லாட வேண்டி இருக்கும். இதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் அதிக புரோட்டின் உணவுகளை எடுத்துக் கொண்டு கார்போஹைட்ரேட்டை தவிர்த்து விட்டாலே போதுமானது என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் உணவு முறையில் பாரம்பரிய தானியங்கள், பழங்கள் மற்றும் நமது சுற்றுசூழலில் விளையக் கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் பணத்தை மட்டுமல்லாது உடல் நலத்தையும் பேணலாம் என்று மருத்துவர் ராஜா எடுத்துக் காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.