வீட்டில் இருந்தபடியே கொரோனா இருப்பதைக் கண்டுபிடிக்க முடியுமா? விளக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது இந்தியா முழுக்கவே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றும் பெரிய அளவிற்கு அறிகுறிகளை வெளிப்படுத்து வதில்லை. இப்படி இருக்கும்போது கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிச் செய்து கொள்வதற்காக ஒவ்வொருவரும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை செய்யவேண்டியுள்ளது.
இந்தப் பரிசோதனையின் முடிவு வெளிவருவதற்கு குறைந்தது ஒரு நாள் காத்திருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. அதோடு தற்போது மருத்துவமனைகளில் வழிந்து வரும் கூட்டநெரிசலைப் பார்க்கும் அவசியமில்லாத டெஸ்ட் தேவையான என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் வீரியமான அறிகுறிகள் ஏற்பட்டால் மட்டுமே பெரும்பலானோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கு முன்வருகின்றனர்.
இந்நிலைமையில் கொரோனா நோய்த்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியுமா? அதோடு தற்போதைய இரண்டாம் அலையில் கொரோனா வைரஸ் என்ன வகையான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகின்றன? ஒருவேளை கொரோனா அறிகுறிகள் இருந்தால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து டாக்டர் தீபக் கண்ணா சிறப்பு நேர்காணல் வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments