முத்தமிடுவதை நிறுத்துங்கோ... கொரோனா அச்சத்தால் பல நாடுகளில் நடந்த நிகழ்வுகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒருவருக்கொருவர் கை குலுக்குவது, முத்தமிடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று பிரான்ஸ அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பொது மக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்த முதல் மரணம் அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளார். இதையடுத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எந்த விதமான சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தள்ளார்.
சீனாவில் கொரோனா பாதிப்பினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை அந்நாடு சந்தித்து வருகிறது. இந்தியாவில் பல மருந்து கம்பெனிகள் அதன் மூலப்பொருட்களுக்கு சீனாவையே நம்பியுள்ளன. இதனால் இந்திய மருந்து உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
சீனாவை அடுத்து ஈரான் மற்றும் தென் கொரியாவில் கொரோனா அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகில் 56 நாடுகளில் பாதிப்பு இருப்பதாக உறுதிச் செய்யப் பட்டுள்ளது. ஈரான் தீவுகளில் தமிழக மீனவர்கள் சிக்கித் தவிப்பதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. பொருளாதார தேவைக்காக ஈரானில் உள்ள குட்டி தீவுகளுக்கு மீன்பிடி தொழிலுக்காகச் சென்றவர்கள் தற்போது பிடித்த மீன்களை விற்பனை கூட செய்ய முடியாமல் இருப்பதாகவும் விமான போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளதால் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளி வந்திருக்கின்றன.
மேலும், கொரோனா பாதிப்பினைத் தடுக்க பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். “குறைந்த பொருளாதாரத்தை உடைய நாடுகளில் இருக்கும் உலக சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த பணக்கார நாடுகள் உதவ முன்வர வேண்டும். தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் இப்போதே நோய் எதிர்ப்புக்கு தேவையான ஆயத்த பணிகளைச் செய்யும் போது பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். மேலும், இதன் பரவலையும் கணிசமாகத் தடுக்க முடியும்” என பில்கேட்ஸ் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு மருத்துவ பத்திரிக்கையில் தனது கருத்தை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தற்போது தென் கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. இதன் பரவல் சீனாவை விட தென் கொரியா, ஈரானில் வேகமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கம்போடியா முதல் கத்தார் வரையிலும் சீனா முதல் அமெரிக்கா வரையிலும் இதன் நீட்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதுவரை உலக நாடுகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 3000 ஐ தொட இருப்பதாகவும் அதே போல நோய் தொற்று பாதிப்பு 1 லட்சத்தை எட்ட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments