தமிழக மக்களுக்கு சுகாதாரச் செயலாளர் கூறிய முக்கிய அறிவுரை!

  • IndiaGlitz, [Saturday,April 24 2021]

கொரோனா வைரஸின் இரண்வடாது அலை இந்தியா முழுவதும் தீவிரம் பெற்று வருகிறது. அதேநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை போன்றவற்றைக் குறித்த பதற்றமும் இந்தியா முழுக்கவே இருந்து வருகிறது. இதனால் கொரோனா அறிகுறி இல்லாமலே சிலர் தங்களது வீடுகளில் கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி செலுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழகச் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் யாரும் ரெம்டெசிவிர் மருந்துகளை தாங்களாகவே வீடுகளில் செலுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கூறும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு 40% படுக்கைகள் காலியாக உள்ளது என்றும் வீட்டுத் தனிமையில் 508% பேரும் கோவிட் கேட் சென்டரில் 8.85% பேரும் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தேவையற்றப் பதற்றத்தை தவிர்க்குமாறும் கூறியுள்ளார். அதோடு சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 2,400 படுக்கைகள் ஏற்படுத்த இருப்பதாகவும் அண்ணா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளா.

இந்நிலையில் மக்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி தாங்களாவே செலுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் சென்னையில் மட்டும் 3,842 பேருக்கும் உயிரிழப்பு 78 ஆகவும் பதிவாகி இருக்கிறது.

அதோடு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு கொண்டு வர உள்ளதாகவும் இதுகுறித்த தகவல்கள் இன்றுமாலை வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
 

More News

காசிமேடு மீன்மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து

கமுதி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு… முன்விரோதம் காரணமா?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தைச்

காதலருடன் நீச்சல் குளத்தில் ஆட்டம்போடும் பிரபல நடிகை… வைரல் புகைப்படம்!

கொரோனா நேரத்தில் பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாலிவுட்டின் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சாக்ஷி மாலிக்

தகுதி இல்லாதவர்களை கட்சியில் இருந்து நீக்குவது எனது கடமை: கமல்ஹாசன்

தகுதி இல்லாதவர்களை காட்சியிலிருந்து நீக்குவதை கடமையாக கருதுகிறேன் என்று கமல்ஹாசன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருமண உடை, லிப்கிஸ்: நித்யா மேனனின் வைரல் வீடியோ!

'180' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'வெப்பம்' 'காஞ்சனா 2' விஜய்யின் 'மெர்சல்' சூர்யாவின் '24' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன்.