பொருட்களின்மீது தங்கும் கொரோனா பல மணி நேரம் வாழும் தன்மையுடையதா???
Send us your feedback to audioarticles@vaarta.com
பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீது ஒரு நாளைக்கும் மேலாக கொரோனா வைரஸால் உயிர்வாழ முடியும். இத்தகவலை தற்போது NIH ஆய்வு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் National Istitutes of Health இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் ஒருவருக்கு தொடுவதால் மட்டும் அல்ல, அது காற்று, பொருட்களின் மீது பரவி வாழும் தன்மையுடையது. குறைந்த பட்சம், காற்றில் கலக்கும் கொரோனா வைரஸ்கள் (Droplets) 3 மணிநேரம் உயிர் வாழக்கூடியது. அதேபோல, பொருட்களின்மீது படரும் கொரோனா வைரஸ் ஒரு நாளைக்கும் மேலாக உயிர்வாழக் கூடிய தன்மையுடையது எனவும் தெரிய வந்திருக்கிறது.
மேலும், பிளாஸ்டிக், ஸ்டீல் பொருட்களின் மீது படரும் கொரோனா வைரஸ் அந்த பொருட்களில் குறைந்தபட்சம் ஒரு நாள் உயிர்வாழுகிறது. பித்தளை மற்றும் உலோகப் பொருட்களின் மீது 4 மணி நேரம்வரை வாழக்கூடிய தன்மையுடையது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தால் பாதிப்புகள் இன்னும் தீவிரமாகும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. கிருமிநாசினிப் பொருட்கைளைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும்போது இந்தப் பொருட்களின்மீது படந்திருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
News: New coronavirus stable for hours on surfaces https://t.co/k3F2FSMmEz
— NIH (@NIH) March 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments