ஒத்திவையுங்கள், மீறினால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது: பாரதிராஜா எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் தீவிர போராட்டம் நடந்து வருகின்றது. இந்த நிலையில் விரைவில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பக்கம் போராட்டக்காரர்கள் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.  சென்னையில் ஐபிஎல் போராட்டத்தை நடத்த விடமாட்டோம் என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் ஐபிஎல் கிரிக்கெட் குறித்து தனது கருத்தை கவிதை வடிவில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது


“என் இனிய தமிழ் மக்களே...
நம் இனத்தை அழித்தார்கள்;
நாம் எதுவும் பேசவில்லை.
நம் மொழியைச் சிதைக்கிறார்கள்;
நாம் மவுனமாக இருக்கிறோம்.
நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும்
போராடாமலே இருக்கிறோம்.

உறைந்து போய்க்கிடக்கும்
நம் உணர்வுகளை
உசுப்பிவிட்டு,
நம்மைப் புரட்சியாளர்களாய்
மாற்ற எத்தனையோ
அமைப்புகள் போராடிக்
கொண்டிருக்கும்போது,
‘ஐபிஎல்’ என்னும் மாய உலகத்திற்கு
நம்மை அடிமைப்படுத்தி,
நம்முடைய தேசியப் புரட்சிக்குத்
தீவைக்கும் முட்டாள்தனமான
விளையாட்டை நிராகரிப்போம்!

தமிழ் மக்களின் ஒற்றுமை
கைகூடி வரும்போது,
கருக்கலைப்பு செய்யவரும்
எந்தவொரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம்!
தமிழா,
ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை
நிராகரி.
நிறைய வேண்டியது
விளையாட்டு மைதானத்தின்
இருக்கைகள் அல்ல...
புரட்சியின் மைதானம்.

தமிழனை விளையாட்டாக
நினைத்து, கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் மூடர்களே... எங்கள் தமிழர்களுக்கு
வீரவிளையாட்டும் தெரியும்
என்பதை நினைவில் வையுங்கள்.
இது எச்சரிக்கை அல்ல...
அன்புச் சுற்றறிக்கை.

உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை.
கொஞ்சம் ஒத்தி வையுங்கள்.
மீறி நடந்தால்,
அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது.
மாறாக,
எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு களம் காணுவார்கள்
என்பதைத் தமிழ் இன உணர்வோடு
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

More News

செய்யுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள்: திருச்சி மாநாட்டில் கமல்

காவிரிப் பிரச்னையை மய்யம்கொள்ளும் இடமாக இந்த மேடை இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்து வருகிறது. மத்தியில் நடக்கும் அரசை நீங்கள் குற்றம் சாட்டவில்லையே எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் 'அருவி' நடிகை

அறிமுக இயக்குனர் அருண்பிரபு இயக்கிய 'அருவி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது.

சில நாட்களுக்கு இவற்றுக்கெல்லாம் ஓய்வு கொடுங்கள்: விவேக் வேண்டுகோள்

தமிழகத்தில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றன. மக்கள் உணர்ச்சி பெருக்குடன் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டதால்

ஐபிஎல் தொடக்க விழாவில் பிரபல தமிழ் நடிகை

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் ஹைலைட்டே போட்டியின் தொடக்க விழாவும் இறுதி விழாவும் தான் என்பதும்

2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது