close
Choose your channels

எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த பாரதிராஜா

Friday, September 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்தனர் என்ற செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிபி கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி அறிந்ததும் நேற்று இரவே உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விவரங்களை மருத்துவர்களின் கேட்டறிந்தார். மேலும் எஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது என்றும் அவர் பேட்டியளித்தார்.

இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரது மகன், மகள், மனைவி, தங்கை உள்பட உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் தான் தற்போது இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் எஸ்பிபி மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். பாரதிராஜாவை அடுத்து மேலும் ஒருசில திரையுலக பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment