close
Choose your channels

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்?

Monday, March 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி இதுவரை தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்த கெளதமியின் மகள் சுப்புலட்சுமி இந்த படத்தின் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கெளதமி மற்றும் பாலா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்றும் விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சுகுமார் ஒளிப்பதிவாளராகவும், ராதான் இசையமைப்பாளராகவும், ஜோக்கர்' இயக்குனர் ராஜூமுருகன் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment