சூர்யா படத்தில் முதன்முறையாக இணையும் தனுஷ்

  • IndiaGlitz, [Saturday,July 14 2018]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் லேட்டஸ்ட்டாக தற்போது தனுஷ் இணைந்துள்ள செய்தி வெளிவந்துள்ளது.

செல்வராகவன் இயக்கிய பல படங்களில் தனுஷ் நடித்துள்ளது மட்டுமின்றி பாடல்களும் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் 'என்.ஜி.கே' படத்திலும் தனுஷ் ஒரு பாடலை பாடுகிறார். சூர்யாவுக்காக தனுஷ் பாடுவது இதுவே முதல்முறை

யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடும் இந்த பாடல் குத்துப்பாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. தனுஷ் பாடிய பல பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலும் அதேபோல் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரிஜினல் கேரக்டரில் நடிக்கும் நடிகை ஆண்ட்ரியா

பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒரு திறமையான நடிகையாக மட்டுமின்றி ஒரு நல்ல பாடகி மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று நடந்த நயன்தாராவின் அடுத்த படத்தின் பூஜை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையடுத்து

ஸ்ரீரெட்டியின் அடுத்த ஃபேஸ்புக் பதிவில் விஷால்

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் வீசிவந்த நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புயல் தற்போது கோலிவுட்டை நோக்கி மையம் கொண்டுள்ளது.

நான் போலி பகுத்தறிவாளனா? தமிழிசைக்கு கமல் பதில்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்றும், அமாவாசை தினத்தில் கட்சி ஆரம்பித்து, அமாவாசை தினத்தில் கொடியேற்றுகிறார்

கமல், விஜய் பட பாணியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இடையே திரையிடப்படவுள்ளது