ரூ.100 கோடி பட்ஜெட், ஒரு வாரத்தில் வெறும் ரூ.3 கோடி வசூல்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஆர்.ஆர்.ஆர்’, ‘கே ஜி எஃப் 2’ போன்ற தென்னிந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் 8 நாட்களில் வெறும் மூன்று கோடி மட்டுமே வசூல் ஆகி இருப்பதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ’தலைவி’ என்ற படத்தில் நடித்தவருமான கங்கனா ரனாவத் நடித்த திரைப்படம் ’தாக்கட்’ என்ற திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியானது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் இந்த படம் தான் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் வசூல் சாதனை செய்யும் என்றும் பாலிவுட் திரை உலகம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த திரைப்படம் வரலாறு காணாத வகையில் மிகக் குறைந்த வசூல் செய்திருப்பது படக்குழுவினர்களுக்கு குறிப்பாக தயாரிப்பாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் வெளியாகி எட்டு நாட்கள் ஆகியும் தற்போது 3.5 கோடி மட்டுமே வசூல் ஆகி இருப்பதாகவும் தயாரிப்பாளருக்கு 97 கோடி நஷ்டம் என்று கூறப்படுவதால் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. குறிப்பாக இந்த படம் வெளியான எட்டாவது நாளில் இந்தியா முழுவதும் வெறும் 4200 ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும், பல திரையரங்குகளில் பார்வையாளர்கள் இல்லாததால் காட்சிகள் ரத்து என வந்திருக்கும் தகவல் இந்த படத்தின் மிகப்பெரிய தோல்வியை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout