டெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்

கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது தெரிய வந்துள்ளதை அடுத்து கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். கொரோனா வைரஸைத் தடுக்க சமூக விலகல் தேவை  என மத்திய மாநில அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில், அந்த அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் தப்லிக் ஜமாத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கூடி மத வழிபாடு மாநாடும் நடந்துள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் இருந்தும், 250க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுச் திரும்பியவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியும் அதில் 10 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனை அடுத்தே ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

More News

தமிழகத்தில் மேலும் 50 பேர்களுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 124 ஆனதால் அதிர்ச்சி

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது 

கணவனை கொலை செய்த மனைவிக்கு ஜாமீன்: தொலைபேசியில் விசாரணை செய்த நீதிபதி

கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவிக்கு  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொலைபேசியிலேயே விசாரணை செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் 

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அடித்து கொலை: ஒரு அதிர்ச்சி சம்பவம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக சுகாதாரத் துறைக்கு

மகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக அனைவரும் சலூன் முன் நிற்பார்கள். 21 நாட்கள் முடிவெட்டாமல்

கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது தென்கொரியா: எப்படி தெரியுமா?   

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பெரும் ஆபத்தில் சிக்கி தவித்திருக்கும் நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா நோயாளிகளே இல்லை என தென்கொரியா அறிவித்துள்ளது