தோட்டத்தில் வேலைப்பார்த்த தொழிலாளர்களை விமானத்தின் மூலம் அழைக்கும் பாசக்கார முதலாளி!!!

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

 

தலைநகர் டில்லியில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தனது தோட்டத்தில் ஏற்கனவே வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதனால் பாட்னாவில் உள்ள அத்தொழிலாளர்கள் மீண்டும் டில்லிக்கு வந்து தற்போது விவசாய வேலைகளை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. திஜிப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரும் விவசாயி ஆண்டுதோறும் ஆகஸ்ட் – ஏப்ரல் மாதங்களில் காளான் விதைப்பில் ஈடுபடுவது வழக்கமாம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் காளான் விதைப்பு மற்றும் அறுவடை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தனது தோட்டத்தில் வேலைப் பார்த்துவந்த பாட்னாவை சேர்ந்த 20 தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்ததிருக்கிறார். இதன் ஒட்டுமொத்த செலவு ரூ.68 ஆயிரம் ஆனதாகவும் அந்த முதலாளி குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது மீண்டும் காளான் விதைப்புக்கான காலம் வந்துவிட்டதால் பாட்னாவில் இருந்து தொழிலாளர்களை மீண்டும் வரவழைக்கும் செயலில் பப்பன்சிங் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக பாட்னாவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வர 20 தொழிலாளர்களுக்கும் 1 லட்சத்துக்கும் மேல் விமான டிக்கெட்டுகளை புக் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாட்னாவின் குக்கிராமங்களில் தங்கியிருக்கும் அத்தொழிலாளர்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகளையும் பப்பன்சிங் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு செலவு செய்து பாட்னாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க வேண்டுமா, அவ்வளவு பணம் செலவு செய்வதற்கு இங்கே உள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே எனப் பலரும் பப்பன்சிங்கிடம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பதில் அளித்த பப்பன்சிங் அத்தொழிலாளர்கள் 15-20 வருடங்களாக என்னுடைய தோட்டத்தில் வேலைசெய்து வருகின்றனர். அவர்களை என்னுடைய குடும்பத்தில் ஒருவராக நான் நினைக்கிறேன் மீண்டும் விவசாயப் பணிகளைத் தொடங்க இருக்கிறோம். இதற்கு நடுவில் பணம் ஒரு பொருட்டாக எனக்குப் படவில்லை. தொழிலாளர்களும் எனக்கு ரொம்ப முக்கியம் எனப் பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

More News

எஸ்பிபி குறித்த பரவிய தகவல் வதந்தி: எஸ்பிபி சரண் விளக்கம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கிக்கணக்கில் ரூ.43 ஆயிரம் கொள்ளை!!! நூதனத் திருட்டின் மர்மப் பின்னணி!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.43,900 கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரார்த்தனை பலித்தது: எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவ்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பேரிடர் காலத்திலும் வேலையின்மை சதவீதத்தை குறைத்து தமிழக அரசு சாதனை!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் கடுமையான வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.

மத்திய அரசுக்கு நன்றி, மாநில அரசின் அறிவிப்பை எதிர்பார்க்கின்றோம்: விஷால்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மத்திய அரசு நேற்று திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு