தோட்டத்தில் வேலைப்பார்த்த தொழிலாளர்களை விமானத்தின் மூலம் அழைக்கும் பாசக்கார முதலாளி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தலைநகர் டில்லியில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தனது தோட்டத்தில் ஏற்கனவே வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதனால் பாட்னாவில் உள்ள அத்தொழிலாளர்கள் மீண்டும் டில்லிக்கு வந்து தற்போது விவசாய வேலைகளை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. திஜிப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரும் விவசாயி ஆண்டுதோறும் ஆகஸ்ட் – ஏப்ரல் மாதங்களில் காளான் விதைப்பில் ஈடுபடுவது வழக்கமாம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் காளான் விதைப்பு மற்றும் அறுவடை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் தனது தோட்டத்தில் வேலைப் பார்த்துவந்த பாட்னாவை சேர்ந்த 20 தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்ததிருக்கிறார். இதன் ஒட்டுமொத்த செலவு ரூ.68 ஆயிரம் ஆனதாகவும் அந்த முதலாளி குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது மீண்டும் காளான் விதைப்புக்கான காலம் வந்துவிட்டதால் பாட்னாவில் இருந்து தொழிலாளர்களை மீண்டும் வரவழைக்கும் செயலில் பப்பன்சிங் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக பாட்னாவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வர 20 தொழிலாளர்களுக்கும் 1 லட்சத்துக்கும் மேல் விமான டிக்கெட்டுகளை புக் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாட்னாவின் குக்கிராமங்களில் தங்கியிருக்கும் அத்தொழிலாளர்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகளையும் பப்பன்சிங் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு செலவு செய்து பாட்னாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க வேண்டுமா, அவ்வளவு பணம் செலவு செய்வதற்கு இங்கே உள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே எனப் பலரும் பப்பன்சிங்கிடம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பதில் அளித்த பப்பன்சிங் அத்தொழிலாளர்கள் 15-20 வருடங்களாக என்னுடைய தோட்டத்தில் வேலைசெய்து வருகின்றனர். அவர்களை என்னுடைய குடும்பத்தில் ஒருவராக நான் நினைக்கிறேன் மீண்டும் விவசாயப் பணிகளைத் தொடங்க இருக்கிறோம். இதற்கு நடுவில் பணம் ஒரு பொருட்டாக எனக்குப் படவில்லை. தொழிலாளர்களும் எனக்கு ரொம்ப முக்கியம் எனப் பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout