டெல்லியிடம் மீண்டும் தோல்விதானா? சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஐபிஎல் 2021 தொடரின் 50 ஆவது லீக் போட்டி இன்று சென்னை சிஎஸ்கேவிற்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருக்கிறது. இந்த அணிகள் இரண்டும் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 9 முறை வெற்றிப்பெற்று 18 புள்ளிகளுடன் ஐபிஎல் அணிகளிலேயே முதலிடம் வகிக்கின்றன.

மேலும் இதற்குமுன்பு டெல்லி அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வியைத் தவிர கடைசியாக சிஎஸ்கே, ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியில் 189 ரன்களை இலக்காக வைத்திருந்தது. இந்த இலக்கை எட்டமாட்டார்கள் என்று கணித்த நிலையில் ராஜஸ்தான் அசால்ட்டாக இலக்கை அடித்து வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியும், ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோத இருக்கிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே பக்கம் டூபிளசிஸ், ருத்ரவாஜ் கெயிக்வாட், ஜடேஜா போன்ற அட்டகாசமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால் பந்து வீச்சில் சிஎஸ்கே படு மோசமான நிலையில் இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.

இன்னொரு பக்கம் டெல்லி கேபிடள்ஸ் அணியில் தவான், பிரித்விஷா, ரிஷப் பண்ட், ஸ்ரேயா ஐயர் போன்றோர் பேட்டிங்கில் அசத்த ரபாடா, அஸ்வின் போன்றோர் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை சிஎஸ்கே ரசிகர்கள் டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் மீண்டும் தோற்றுபோய் விடுவோமோ என்ற பதற்றத்தில் இருக்கின்றனர்.

மேலும் இறுதியாக நடைபெற்ற போட்டியில் டுவைன் பிராவோ மற்றும் தீபக் சாஹர் இருவரும் சிஎஸ்கே அணியில் இடம்பெறவில்லை. டுவைன் பிராவோ டெத் ஓவர்களில் அணியை சிறப்பாக காப்பாற்றிவிடுவார். அதேபோல பவர் ப்ளே ஓவரில் தீபக் சாஹரின் உதவி சிஎஸ்கேவிற்கு அவசியம். இந்நிலையில் இருவரையும் அணிக்குள் சேர்ப்பார்களா? டெல்லியுடன் வெற்றிப் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

இன்றைய சிஎஸ்கே மேட்சில் முக்கிய வீரர் இல்லையா? கலங்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் 2021 தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் அனைத்தும் இந்த வாரம் முடிவடைய இருக்கிறது.

'அண்ணாத்த' படத்தின் எஸ்பிபி பாடல் ரிலீஸ்: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தில் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் பாடியுள்ளார்

அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்: போலீஸார் அதிர்ச்சி!

அஜித் வீட்டின் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'கூண்டுல புயலுக்கு வேலையில்ல: 'அண்ணாத்த' சிங்கிள் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்

வெள்ளை காஸ்ட்யூமில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்!

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிய ரம்யா பாண்டியன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில்